இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்திற்குக் கனடா அரசு சுமார் 82 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வெளிநாட்டில் வர்த்தகம் செய்யும் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
சமீபத்தில் TCS மீது அமெரிக்காவில் இனம் மற்றும் வயது சார்ந்து ஊழியர்களைப் பாகுபாடு காட்டி பணிநீக்கம் செய்துள்ளதாக 22 அமெரிக்க டெக்வல்லுநர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இந்திய - கனடா மத்தியில் ஏற்கனவே பல பிரச்சனைகளில் முரண்பட்டு நிற்கிறது.

இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு இந்திய ஐடி நிறுவனத்திற்கு 1.34 லட்சம் கனடா டாலர் அபராதம் விதித்துள்ளதாக PTI அறிவித்துள்ளது.
கனடா-வின் குற்றச்சாட்டு: கனடா அரசு, இன்ஃபோசிஸ் நிறுவனம் 2020 டிசம்பர் 31 ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டில் ஊழியர் நல வரி அதாவது ஹெல்த் டாக்ஸ் குறைவாகச் செலுத்தியதற்காக அபராதம் விதித்துள்ளதாகக் கூறியுள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்குக் கடந்த வாரம் கனடா நிதித்துறையிடமிருந்து அபராதத்திற்கான உத்தரவு வந்துள்ளது. இந்த உத்தரவில், நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பதில்: கனடா அரசின் அபராதத்திற்குப் பதிலளித்த இன்ஃபோசிஸ் நிறுவனம், இந்த அபராதம் நிறுவனத்தின் நிதி நிலை, செயல்பாடுகள் அல்லது பிற நடவடிக்கைகளை எந்த வகையிலும் பாதிக்காது என்று முதலில் அதன் பங்குதாரர்களுக்கு உறுதிப்பாடு உடன் தெரிவித்துள்ளது.
கனடாவில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆல்பர்ட்டா, ஒன்டாரியோவின் மிசிஸ்சுங்கா, பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னாபி மற்றும் ஒன்டாரியோவில் (ஒட்டாவா) ஆகிய பகுதிகளில் அலுவலகம் வைத்துள்ளது.
கனடாவின் ஊழியர் நலவரி (EHT) என்றால் என்ன?: கனடாவின் ஒன்டாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணங்களில், ஊழியர் நலவரி (Employee Health Tax - EHT) என்பது முதலாளிகள் அதாவது நிறுவனம் செலுத்த வேண்டிய தொகையாகும்.
ஊதியங்கள், போனஸ், வரி விதிக்கப்படும் சலுகைகள் மற்றும் பங்கு விருப்பத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த வரி கணக்கிடப்படுகிறது. இந்த வரியின் முதன்மையான நோக்கம், மாகாணத்திற்குள் உள்ள சுகாதார சேவைகளுக்கான நிதியுதவிக்குப் பங்களிப்பதாகும்.
மேலும் இன்போசிஸ் இந்த அபராத தொகையைச் செலுத்தப்போகிறதா அல்லது மேல்முறையீடு செய்யப்போகிறதா என்ற கேள்விக்கு, பதில் இன்போசிஸ் தரப்பில் இருந்து இன்னும் கிடைக்கவில்லை.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications