கனடா: வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பாக கனடா அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கனடாவிற்கு சென்று வேலை வாய்ப்பு பெற்று அங்கே செட்டில் ஆவது என்பது இனி கடினமானதாக இருக்கும்.
வெளிநாட்டவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்து வந்த கனடா நாட்டுக்கு தற்போது அது தான் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. எனவே கனடா அரசு தங்களுடைய தற்காலிக வெளிநாட்டு வேலை ஆட்களுக்கான திட்டத்தில் (Temporary Foreign Worker Program (TFW) ) மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

வெளிநாட்டு பணியாளர்களை சார்ந்திருக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்பதற்காகவும் கனடாவை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் தகுதி வாய்ந்த கனடா நாட்டவர்கள் குறிப்பிட்ட பணிக்கு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 8ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டை சேர்ந்த தற்காலின ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கான ஊதியம் என்பது 5 டாலர்கள் முதல் 8 டாலர்களுக்கு உள்ளாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனடாவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக ஊதியத்தை தர வேண்டியதிருக்கும் எனவே அவர்கள் உள்நாட்டு ஊழியர்களுக்கே முன்னுரிமை வழங்குவார்கள்.
கனடாவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள், இந்த Temporary Foreign Worker Program திட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி கனடாவை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்காமல் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை கண்டறிந்து தான் அந்நாட்டு அரசு இப்படி ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.
மேலும் வெளிநாட்டு ஊழியர்கள் குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு கிடைப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. எனவேதான் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை கன்னட அரசு அதிகரித்துள்ளது. எனவே கனடாவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் முதலில் கனடா நாட்டவருக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும்.
இந்த புதிய மாற்றமானது குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் மற்றும் அதிக ஊதியத்திற்கு வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் என இரண்டு பகுதிகளாக பிரிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் அதிகம் பாதிக்கப்பட போவது குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யக்கூடிய வெளிநாட்டவர்கள் தான்.
தற்போது நிறுவனங்கள் கனடா நாட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருப்பதால் அங்கே குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட உள்ளனர். இவர்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது.
அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை நிறுவனங்களே செய்து தர வேண்டும் என கனடா அரசு கூறியுள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தங்களுடைய மொத்த பணியாளர்களில் 10 சதவீதத்திற்கு மேல் வெளிநாட்டு ஊழியர்களை நியமனம் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications