கனடா அரசு, திறமையான தொழிலாளர்களை நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஈர்ப்பதற்காக இரண்டு புதிய குடியேற்ற திட்டங்களை அறிவித்துள்ளது. கனடா குடியேற்றம் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் இந்த திட்டங்களை அறிவித்தார். இந்த 2 இரண்டு திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டும் அல்லாமல் நேரடியாக குடியுரிமை பெறும் வாய்ப்பையும் வெளிநாட்டவர்களுக்கு கனடா அரசு அளிக்கிறது.
ஊரக சமூக குடியேற்றத் திட்டம் (RCIP) ஊரக பகுதிகளில், அதாவது சிறிய டவுன் மற்றும் கிராமபுறங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் உள்ளூர் நிறுவனங்கள் அதாவது இப்பகுதிகளில் இருக்கும் நிறுவனங்கள் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுடன் இணைக்கப்படுவார்கள்.

கனடா நாட்டில் பல மாகாணங்களில் உள்ள 18 பகுதிகளில் இந்த திட்டம் செயல்படும். இதன் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வேலை வாய்ப்புடன் நிரந்தர குடியுரிமையும் கிடைக்கும்.
இரண்டாவது திட்டமான பிரெஞ்சு பேசும் சமூக குடியேற்றத் திட்டம் (FCIP) கியூபெக் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள சிறுபான்மையின பிரெஞ்சு பேசும் சமூகங்களுக்கு பிரெஞ்சு பேசும் மக்களை அதிகளவில் குடியேற்ற உதவும் திட்டமாக இத்திட்டம் செயல்படுகிறது.
இந்த இரு திட்டங்களும் உள்ளூர் பொருளாதார மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் கனடா குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) இடையே இணைந்து செயல்படும். உள்ளூர் அமைப்புகள் தங்கள் சமூகங்களில் நிலவும் முக்கியமான தொழிலாளர் பற்றாக்குறையை அடையாளம் கண்டு, இத்துறையில் அனுபவம், நிபுணத்துவம் பெற்றுள்ள ஊழியர்களை நியமிக்க வழிவகை செய்கிறது.
இவ்விரு திட்டங்களுக்கு கீழ் விண்ணப்பம் செய்பவர்களை ஆய்வு செய்து, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க நம்பகமான நிறுவனங்களை நியமித்து, பணியில் அமர்த்தி, அந்த நிறுவனங்கள் நிரந்தர குடியுரிமைக்கு தகுதியானவரை பரிந்துரைக்கும்.
இந்தியர்கள் விண்ணப்பம் செய்ய என்ன தகுதி..?
இரு திட்டங்களுக்கு கீழ் விண்ணப்பம் செய்ய குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் வேலை ஆணையை முதலில் பெற வேண்டும். இதன் பின்பு தான் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு தகுதி அடைய முடியும்.
ஆனால் இந்த வேலைவாய்ப்பை பெற சில முக்கியமான தகுதிகள் வேண்டும். அதாவது இந்த வேலை தொடர்புடைய அனுபவம் (கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ஒரு வருடம் அல்லது 1,560 மணிநேரம் பணியாற்றியிருக்க வேண்டும்), மற்றும் மொழி திறன் தேவைகள் (உயர் திறன் கொண்ட வேலைகளுக்கு கனடிய மொழி திறன் அளவீடு 6 மற்றும் குறைந்த திறன் கொண்ட பணிகளுக்கு 4) ஆகியவை அடங்கும்.
கனடாவிற்கு வெளியே கல்வி பயின்ற விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ் மதிப்பீட்டையும் வழங்க வேண்டும். கூடுதலாக, அனைத்து விண்ணப்பதாரர்களும் கனடாவில் தங்களைத் குடும்பத்தினரை நிர்வாகம் செய்துக்கொள்ளும் அளவுக்கு போதுமான நிதி ஆதாரம் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
சுகாதாரத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள், குறிப்பாக செவிலியர் உதவியாளர்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு தொழிலாளர்கள் போன்றோர் அதிக தேவை உள்ளவர்கள் மற்றும் இந்த திட்டங்களுக்கு தகுதியானவர்கள். மேலும், சுகாதாரத் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் நிரந்தர குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் போது இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக வொக்ட் பர்மிட் பெற்றவர்களாகவும் இருக்கலாம்.
RCIP திட்டத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்:
நோவா ஸ்கோஷியா: பிக்டோ மாகாணம்
ஒன்டாரியோ: நார்த் பே, சட்பரி, டிம்மின்கள், சால்ட் ஸ்டீ. மேரி, தண்டர் பே
மானிடோபா: ஸ்டீன்பாக், அல்டோனா/ரைன்லேண்ட், பிராண்டன்
சஸ்கட்சுவான்: மூஸ் ஜா
அல்பர்ட்டா: கிளாரெஷோம்
பிரிட்டிஷ் கொலம்பியா: வெஸ்ட் கூட்டனே, வெஸ்ட் ஒகனாகன் ஷுவாப், பீஸ் லியார்ட்
FCIP திட்டத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்:
நியூ பிரன்சுவிக்: அகாடியன் தீபகற்பம்
ஒன்டாரியோ: சட்பரி, டிம்மின்கள், சூப்பீரியர் கிழக்கு பகுதி
மானிடோபா: செயிண்ட் பியர் ஜோலிஸ்
பிரிட்டிஷ் கொலம்பியா: கெலோனா
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications