இந்தியாவுடன் நீண்ட காலமாக நட்புடன் உடன் இருப்பது மட்டும் அல்லாமல் அதிகப்படியான இந்தியர்கள், தமிழர்களுக்கும் குடியுரிமை கொடுத்த நாடாக இருக்கும் கனடாவுக்கும் - இந்தியாவுக்குமான நட்புறவு உடைந்துள்ளது.
இதற்கான ஆரம்பம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கனடா நாட்டு மண்ணில் கனடா குடியுரிமை கொண்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் மரணத்தில் இந்திய அரசுக்கு தொடர்புடையதாக குற்றம் சாட்டியதில் இரு நாடுகளுக்கும் மத்தியிலான பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்துள்ளது.

இதன் வாயிலாக இரு நாடுகள் மத்தியில் இருந்து இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் இந்தியாவுக்கு எதிராக கனடா எடுத்த பல நடவடிக்கையில் கனடா நாட்டில் இருக்கும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருளான மசூர் பருப்பு-ன் வர்த்தகம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டுக்கு பின்பு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அல்லது விற்பனை செய்யப்படும் மசூர் பருப்பு அளவு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் இதற்கு இந்தியாவும் பதலடி கொடுக்கும் வகையில் முக்கிய ஏற்றுமதியில் கைவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அரசு இந்திய இறக்குமதிகளுக்கு திட்டமிட்டு வரி விதித்த போது இந்திய அரசும் பதிலுக்கு வரியை விதித்து அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நாட்டை விட்டே ஓடப்போனது.
தற்போது கனடாவில் இருந்து இந்தியாவுக்கான மசூர் பருப்பின் ஏற்றுமதி குறைந்துள்ள காரணத்தால் கனடா விவசாயிகள் பாதிப்படைவது மட்டும் அல்லாமல், இந்திய சந்தையில் பருப்பு வகைகளின் விலை உயர்ந்து மீண்டும் உணவு பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது அடுத்த வருட பொது தேர்தலில் பெரும் பாதிப்பாக இருக்கும்.
சமீபத்தில் இந்தியாவில் உணவு பொருட்களின் உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால் கோதுமை ஏற்றுமதி, அரிசி ஏற்றுமதியில் பல தடைகளையும் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்தது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் உள்நாட்டில் இதன் விலையை கட்டுப்படுத்த அரசு எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கையாக இருந்தது.
ஆனால் இப்போது கனடாவின் மசூர் பருப்பு ஏற்றுமதியில் நடந்திருப்பது முற்றிலும் மாறுபட்டது. இதை மோடி தலைமையிலான அரசு எப்படி சமாளிக்க போகிறது.


Click it and Unblock the Notifications