15 லட்சம் பேருக்கு காத்திருக்கும் வாய்ப்பு.. கனடா போக தயாரா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கனடா 2025ம் ஆண்டுக்குள் 15 லட்சம் குடியேற்றங்களை அனுமதிப்பாக இலக்கு நிர்ணயித்துள்ளது. கனடாவில் ஓய்வுபெறுபவர்களின் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளது. ஆக கனடாவில் தேவை என்பது அதிகளவில் உள்ளது. அதனை பூர்த்தி செய்ய கனடா வெளி நாட்டவர்களை அதிகளவில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.

 

சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, 2025ம் ஆண்டுக்குள் ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் எனும் விகிதத்தில் மூன்று ஆண்டுகளில் 15 லட்சம் பேரை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.

சம்பள செலவு அதிகரிக்கலாம்

சம்பள செலவு அதிகரிக்கலாம்

வெளி நாட்டவர்கள் அதிகளவில் வருவதை ஒரு தரப்பினர் விரும்பவில்லை என்றாலும், மறுபுறம் அதிகப்படியான தேவையால் சம்பள செலவுகள் அதிகரிக்கலாம் என கனடா நிறுவனங்கள் நினைக்கின்றன. இது குறித்த கவலைய ஏற்கனவே கவலையை தெரிவித்துள்ளன. கனடாவின் இந்த திட்டமானது முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பிரிட்டனை விட 8 மடங்கும், அமெரிக்காவினை விட 4 மடங்கும் அதிகமாகும்.

மொத்த மக்கள் தொகை

மொத்த மக்கள் தொகை

கனடாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கனடாவின் மொத்த மக்கள் தொகை 39 மில்லியன் ஆகும். ஒவ்வொரு 4 பேரிலும் ஒருவர் வெளி நாட்டில் பிறந்தவர். இந்த எண்ணிக்கையானது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிரந்தர குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கும் கனடா
 

நிரந்தர குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கும் கனடா

கனடா நீண்டகாலமாகவே தங்களது பொருளாதார வளர்ச்சியினை அதிகரிக்க, நிரந்தர குடியிருப்பாளார்களை ஊக்குவித்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து 4 லட்ச பேருக்கும் மேலாக வெளி நாட்டவர்களை அனுமதித்தது.

கனடாவில் பிறப்பு விகிதம் சரிவு, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் நிலையில் , புலம்பெயர் மக்களை அதிகரிக்க கனடா அரசு நீண்டகாலமாகவே திட்டமிட்டு வருகின்றது.

 கனடாவின் மெகா திட்டம்

கனடாவின் மெகா திட்டம்

இதற்கிடையில் தான் வரவிருக்கும் ஆண்டுகளில் வெளி நாட்டவர்களுக்கு கடந்த ஆண்டினை அதிகளவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த போக்கு இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் 2023 - 2025ம் ஆண்டுகளில் வெளி நாட்டவர்களை அதிகளவில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. அதில் 2023ம் ஆண்டில் 465000 பேரையும், 2024ல் 4,85,000 பேரையும், 2025ல் 5,00,000 பேரையும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 15 லட்சம் பேரை நாட்டில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.

எதற்காக இந்த அனுமதி?

எதற்காக இந்த அனுமதி?

கனடாவின் இந்த குடியேற்ற திட்டத்திற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றது. ஒன்று ஊழியர்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. அதேசமயம் வேலை வாய்ப்பு என்பது மிகப்பெரியளவில் உள்ளது.

கனடாவில் குறைந்தபட்ச பிறப்பு விகிதமானது ஊழியர்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. 2030ம் ஆண்டில் சுமார் 9 மில்லியன் பேர் ஓய்வுபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் கனடா குடியேற்ற விதிகளை தளர்த்தியுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்தில் இருந்து எப்படி வேறுபட்டது?

அமெரிக்கா, இங்கிலாந்தில் இருந்து எப்படி வேறுபட்டது?

கனடாவின் குடியேற்ற பாலிசிகள், அமெரிக்கா, இங்கிலாந்து பாலிசியை விட எப்படி மாறுபட்டது.

கனடாவில் உள்ள பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளி நாட்டவர்கள் தான். அவர்களின் திறமையால் அவர்கள் இங்கு உள்ளனர். ஆனால் அமெரிகாரிவில் பொருளாதாரத்திற்காக 20% பேர் அனுமதிக்கப்படுகின்றமர். இதே இங்கிலாந்திலும் நிரந்தர விசாவினர் பொருளாதார காரணங்களுக்காக நியமிக்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் திறமை மிகுந்த இந்தியர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: canada job கனடா
English summary

Canada plans to increases 1.5 millions in next 3 years amid labour shortage

Canada has set a target of 1.5 million immigrants by 2025.
Story first published: Thursday, November 24, 2022, 23:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X