கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னி, இந்தியாவுடனான உறவுகளைச் சரிசெய்து, புதிய உலகளாவிய கூட்டணிகளை உருவாக்கும் முயற்சியில், தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணமாக மும்பை வந்துள்ளார். அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, 'நடுத்தர வல்லமை கொண்ட நாடுகள்' தலைமையிலான ஒரு புதிய உலகளாவிய வர்த்தக ஒழுங்கை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தன்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக கார்னி மும்பையில் வர்த்தகத் தலைவர்களைச் சந்திப்பார். விரிவான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவார் என்று அவரது வெளியுறவுத் துறை அமைச்சர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இதற்காக டெல்லி செல்லும் அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசு கனடிய குடிமகனும், முக்கிய சீக்கியப் பிரிவினைவாதியுமான ஒருவரின் கொலையுடன் தொடர்புடையது என்று பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை வைத்தார். இதனால் கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவில் விரிசல்கள் ஏற்பட்டன. ஆனால் அவரது கொலையில் எந்தவித தொடர்பும் இல்லை என இந்தியா மீண்டும் மீண்டும் மறுத்துள்ளது.
கனடாவை அமெரிக்கா சார்பு நிலையிலிருந்து விலக்கி, டொனால்ட் டிரம்ப்பின் வரிப் போர் மற்றும் இணைப்பு அச்சுறுத்தல்களிலிருந்து மீட்கும் நோக்கில் அவர் கனடாவிற்கு மூலதனத்தை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகிறார் என்று கனடா வர்த்தக சபை தலைவர் கோல்டி ஹைதர் தெரிவித்தார். "இது கனடா நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதை இலக்காகக் கொண்ட ஒரு வணிகப் பயணம்" என்று அவர் குறிப்பிட்டார். இந்த அணுகுமுறை, ட்ரூடோ காலத்தின் அணுகுமுறையிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றமாகும் என்று ஹைதர் தெரிவித்தார்.
கடந்த மாதம், ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டின. பெரும்பாலான பொருட்களுக்கான வரிகளை குறைக்கும் இந்த ஒப்பந்தம், கனடாவும் விரைவில் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்ற எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.
"கார்னிக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த உணர்வும், மிகவும் மூலோபாய அணுகுமுறையும் உள்ளது" என்று டொரண்டோ பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பேராசிரியர் பார்த்தா மோகன்ராம் கூறினார். "அவர் அங்கே பாங்ரா நடனம் ஆடப் போவதில்லை," என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், கார்னியின் இந்திய அணுகுமுறை கனடாவில் உள்ள சில சீக்கிய குழுக்களிடமிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
இந்தியாவுக்குப் பிறகு, கார்னி ஆஸ்திரேலியாவுக்குச் செல்வார். அங்கு அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுதுவதுடன் இராணுவம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் தொடர்புகள் குறித்தும் பேசுவார். ஒட்டாவா திரும்பு வழியில், கார்னி ஜப்பான் பிரதமர் சனேய் டகைச்சியுடன் சந்திப்பார். மேலும், வாகனங்கள், எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்களில் வர்த்தகத்தை அதிகரிப்பது பற்றிப் பேசுவார் என அறிவிக்கபப்ட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, அமெரிக்க சார்பு நிலையை குறைப்பது ஆகியவற்றை இலக்காக கொண்டு கார்னி இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்லார். இது இந்திய தரப்புக்கும் சாதகமான ஒப்பந்தங்களை ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications