கனடாவில் நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. இதனை அடுத்து லிபரல் கட்சியை சேர்ந்தவரும் கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவருமான மார்க் கார்னி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டு பிரதமராக மார்க் கார்னி தேர்வாகி இருப்பதன் மூலம் இந்தியா கனடா உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு முன்பு கனடா நாட்டு பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான நிர்வாகம் இந்திய அரசின் மீது ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதன் காரணமாக இந்தியா மற்றும் கனடா இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழலில் தான் கனடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக அளவில் புகழ்பெற்ற ஒரு பொருளாதார வல்லுநர் , அது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து வங்கி மற்றும் கனடா நாட்டு வங்கியின் முன்னாள் தலைவராக செயல்பட்டு வந்தவர். இவரை பொறுத்தவரை வெளிநாடுகளுடனான கனடா நாட்டின் உறவை மீண்டும் புதுப்பிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக திங்கட்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்த மார்க் கார்னி இந்தியாவுடனான கனடாவின் உறவு மிகவும் முக்கியமானது என தெரிவித்திருந்தார்.
தன்னுடைய தேர்தல் பரப்புரையின் போது தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கார்னி, இந்தியா கனடா இடையிலான உறவு பல்வேறு மட்டங்களிலும் மிக முக்கியமான உறவாக இருக்கிறது, தனிப்பட்ட முறையிலும் பொருளாதார ரீதியாகவும் இந்தியர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே ஆழ்ந்த உறவு இருக்கிறது என தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தியா கனடா இடையிலான உறவில் சில சிக்கல்கள் ஏற்பட்டன என்பது உண்மைதான் ஆனால் இரு நாடுகளும் பரஸ்பரம் அதை பேசி தீர்த்துக்கொண்டு இருநாட்டு உறவை அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். எனவே கார்னி கனடா பிரதமராக தேர்வாகி இருப்பதன் மூலம் இந்தியா கனடா இடையிலான உறவு மீண்டும் உயிர்ப்பெறும் என்ற நம்பிக்கை எழுந்து இருக்கிறது.
குறிப்பாக இந்தியா கனடா இடையிலான வர்த்தக உறவு மேம்படும் . மார்க் கார்னி இந்தியாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவதிலும் இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவதிலும் தீவிரமாக இருப்பதை பல்வேறு பேட்டிகளிலும் குறிப்பிட்டு இருக்கிறார். எனவே கனடா பிரதமராக அவர் தேர்வாகியிருப்பது இந்தியா கனடா இடையினான உறவில் மாற்றத்தை கொண்டு வரும் .
கனடா தன்னுடைய ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்டவற்றுக்கு முழுக்க முழுக்க அமெரிக்காவை சார்ந்திருக்கும் போக்கை மாற்றி மற்ற நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் இவர் கவனம் செலுத்துவார் என சொல்லப்படுகிறது.முன்னதாக பிரதமராக தேர்வாகி இருக்கும் மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications