இந்திய மக்களின் அமெரிக்க கனவை நினைவாக்கும் ஒது துருப்பு சீட்டாக இருந்து வந்த ஹெச்1பி விசா மீது கடுமையான கட்டுப்பாடுகளையும், கட்டணங்களையும் டிரம்ப் விதித்திருக்கும் நிலையில், உலகளாவிய திறன்வாய்ந்த ஊழியர்களை ஈர்க்கும் பொருட்டு கனடா முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் டெக்னாலஜி துறை வளர்ச்சிக்கு ஹெச்1பி விசா எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்தது என அனைவருக்கும் தெரியும், இதனாலேயே டிரம்ப் 1 லட்சம் டாலர் கட்டணம் விதித்த அடித்த சில நாட்களில் ஐரோப்பிய நாடுகள் உலகளவிய திறன்வாய்ந்த ஊழியர்களுக்கு பல்வேறு விதிமுறை தளர்வுகளுடன் கதவுகளை திறப்பதாக அறிவித்தது.

ஆனாலும் நிறுவனங்களுக்கு அமெரிக்க சந்தை மிகவும் முக்கியம் என்பதால் அதிகளவிலான ஊழியர்களை ஐரோப்பிய சந்தையில் பணியில் அமர்த்த தயக்கம் காட்டி வருகிறது. இதை சரியாக உணர்ந்த அமெரிக்காவின் அண்டை நாடான கனடா முக்கியமான முடிவை அறிவித்து, ஒட்டுமொத்த டெக் நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆக மாற்றியுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி, அடுத்த பட்ஜெட்டில் புதிய குடியேற்றத் திட்டத்தை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என விளக்கினார்.
அதோடு, திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்க்கவும், புதுமையான தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கவும் கவனம் செலுத்துவதையும் கவனத்தில் கொண்டு புதிய குடியேற்ற கொள்கை இருக்கும் என தெரிவித்தார். இது, கனடாவின் வளர்ச்சிக்கு உதவும் அதே வேளையில், உள்ளூர் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமையும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய H-1B விசாக்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணத்தை அமேசான், மெட்டா போன்ற டெக் நிறுவனங்களை பாதிக்கும். சில ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், சர்வதேச திறமைகளை அதிகம் சார்ந்து இருக்கும் நிறுவனங்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி மார்க் கார்னி அரசின் புதிய திட்டம் மூலம் அமெரிக்காவுக்கு செல்ல விரும்பும் தொழில்நுட்ப நிபுணர்களை கனடா ஈர்க்கும். இதன் மூலம், கனடா தனது தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்திய குடியேற்றக் கட்டுப்பாடுகளை கார்னி அரசு தொடர்ந்து பின்பற்றுகிறது. கனடாவின் மக்கள் தொகை வளர்ச்சி உலக அளவில் அதிகரித்ததால், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் வருகையைக் குறைக்கப்பட்டது.
இந்தக் கட்டுப்பாடுகள், உள்ளூர் வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளைப் பாதுகாக்க உதவின. இப்படியிருக்கையில் புதிய குடியேற்ற திட்டம், கனடாவின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் அந்நாட்டு சமூக கட்டுப்பாட்டில் சமநிலைப்படுத்தவும் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் பல நிறுவனங்கள் ஹெச்1பி விசா-வை இனி பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில், அமெரிக்காவின் டைம் சோன்-க்கு இணையான இடத்தில் அதிகளவிலான ஊழியர்களை பணியில் அமர்த்தி அமெரிக்க வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. அப்படி பார்த்தால் முதல் தேர்வு கனடா தான், அதன் பின்பு தான் மெக்சிகோ, பிற தென் அமெரிக்க நாடுகள் லிஸ்டில் வருகிறது. இதோடு இந்திய ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே கனடாவில் பெரிய அளவிலான வர்த்தகத்தை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications