கனடா: கனடாவில் படிப்பதற்காக விசாவில் சென்ற 20,000 இந்திய மாணவர்கள் எந்த கல்லூரியிலும் சேராமல் இருப்பது தெரியவந்துள்ளது. கனடாவில் விசா மற்றும் குடியேற்ற கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கனடாவில் செயல்பட்டு வரக்கூடிய கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் விவரங்களை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கனடா நாட்டின் குடியேற்ற துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு தரவில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.

கனடாவில் கல்வி பயில்வதற்கான விசா பெற்ற 50,000 சர்வதேச மாணவர்கள் எந்த கல்வி நிலையங்களிலும் சேராமல் இருப்பது தெரியவந்துள்ளது. கனடாவின் குடியேற்ற துறை வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2024 ஆம் ஆண்டில் கல்வி விசாவில் கனடாவிற்கு வந்த சுமார் 50,000 வெளிநாட்டு மாணவர்கள் எந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் சேரவில்லை. இதில் 5.4 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
144 நாடுகளிலிருந்து கல்வி பயில்வதற்காக விசா பெற்று கனடாவிற்கு வந்தவர்கள் குறித்த தரவுகள் தான் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி சீனாவை சேர்ந்த 6.4 சதவீத மாணவர்கள், ஈரானை சேர்ந்த 11.6 சதவீத மாணவர்கள் பிலிப்பைன்ஸை சேர்ந்த 2.2 சதவீத மாணவர்கள் எந்த கல்வி நிலையங்களிலும் சேர்ந்து கல்வி பயிலவில்லை .
அதிகபட்சமாக ரிவாண்டா நாட்டில் இருந்து வந்த சுமார் 48 சதவீதம் பேர் கல்லூரிகளிலோ அல்லது பல்கலைக்கழகங்களிலோ சேரவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இவ்வாறு கல்லூரிகளில் சேராத மாணவர்கள் சட்டவிரோதமாக கனடா வழியாக அமெரிக்காவிற்கு சென்று இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கனடா நாட்டு எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு செல்வது எளிமையானதாக இருக்கிறது.
எனவே இதற்கு கனடாவில் செயல்படக்கூடிய சில கல்லூரிகளும் இந்தியாவில் செயல்படக்கூடிய சில ஏஜென்சிகளும் உடந்தையாக இருப்பது தெரிய வருகிறது. அந்த வகையில் கனடாவில் கல்வி நிறுவனங்கள் போல பதிவு செய்து கொண்டு சில நிறுவனங்கள் முறைகேடாக மாணவர்களை கனடா வரவழைத்து அங்கிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கின்றனர் என சொல்லப்படுகிறது.
கல்வி விசாவில் வந்தவர்களின் எண்ணிக்கையும் தற்போது கல்வி நிறுவனங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையும் பார்க்கும்போது மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் நாட்டு விசாவை பலரும் தவறாக பயன்படுத்துவது தெரிய வந்துள்ளதாக கூறும் கனடா நாட்டு அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
ஏற்கனவே கனடாவில் வேலைவாய்ப்புகளில் உள்நாட்டவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறி அந்நாட்டு அரசு வேலைக்கான விசா பெற புதிய விதிமுறைகளை அறிவித்தது. தற்போது மாணவர் விசாவிலும் மாற்றம் கொண்டு வரப்படலாம் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications