கனடா அரசு திட்டமிட்டபடி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளது. டிரம்ப் நேற்றைய அறிவிப்பில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார், ஸ்டீல், லாரி, ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கு 50 சதவீத வரியை ஆகஸ்ட் 22ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என அறிவித்தார்.
இதை தொடர்ந்து 24 மணிநேரத்தில் கனடா அரசு இந்த வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதைவிட முக்கியமாக அமெரிக்கா - கனடா மத்தியில் நடக்கும் இந்த வர்த்தக போரில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், துறைகள், ஊழியர்கள் என பலருக்கு நிதியியல் உதவிகளை மார்க் கார்னி தலைமையிலான கனடா அரசு அறிவித்துள்ளது.

கனடா அறிவித்துள்ள இந்தப் புதிய வரி செப்டம்பர் 8ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 700 பொருட்களுக்கு 15%, 25%, 50% வரி விதிக்கப்பட்டு உள்ளதாகக் கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த 700 பொருட்களின் ஒரு வருடத்திற்கான வர்த்தக மதிப்பு 27.6 பில்லியன் கனடா டாலர் மதிப்புடையதாக உள்ளது. இது அமெரிக்கா டாலர் மதிப்பில் 19.94 பில்லியன் டாலராகும். ஸ்டீல், அலுமினியம், பர்னிச்சர், ஆடைகளுக்கு 50 சதவீத வரி, சீஸ், வீட்டு உபயோக பொருட்கள், கடல் உணவுகளுக்கு 25 சதவீத வரி, எலக்ட்ரானிக்ஸ், இதர கருவிகளுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த அமெரிக்கா - கனடா மத்தியிலான வர்த்தக போரின் மூலம் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், தொழிற்துறைக்கு சுமார் 7.5 பில்லியன் கனடிய டாலர் மதிப்பிலான நிதி உதவிகள வழங்கப்பட உள்ளது.
இந்த நிதி உதவி மூலம் கனடாவில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகளவில் பயனடையும். இப்புதிய வரி குறித்து கனடா நாட்டின் நிதியமைச்சர் Francois-Philippe Champagne கூறுகையில், அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு பதிலடியாக டாலருக்கு டாலர், வரிக்கு வரி என பதிலடி கொடுத்துள்ளோம்.
மேலும் நிதி ஆதரவு மூலம் ஊழியர்கள், விவசாயிகள், குடும்பங்கள், நிறுவனங்களுக்கு போதுமான உதவி கிடைக்கும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications