இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் கனடா அரசு 'திடீர்' முடிவு.. சோகத்தில் இளைஞர்கள்..!

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு பணியாற்றச் செல்லும் பல கோடி மக்களின் விருப்பங்களில் ஒன்றாக இருப்பது கனடா, ஐடி முதல் மருத்துவச் செவிலியர்கள் வரையில் பல தரப்பட்ட வேலைவாய்ப்புகள் கனடாவில் அதிகம் என்பதால் படிந்த இந்தியர்கள் அனைவருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு அடுத்ததாகக் கனடா வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு முக்கியத் தேர்வாக உள்ளது.

இந்தியா - கனடா மத்தியிலான நட்புறவில் ஏற்பட்டு உள்ள விரிசலுக்கு மத்தியில் அந்நாட்டுக் குடிவரவு துறை அமைச்சரான மார்க் மில்லர், கடனா நாட்டிற்கு வரும் இந்தியர்களின் விசா விண்ணப்பத்தைப் பிராசஸ் செய்யும் வேகத்தைத் தற்காலிகமாகக் குறைக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல லட்சம் இந்தியர்களின் கனவை உடைத்துள்ளது.

இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் கனடா அரசு 'திடீர்' முடிவு.. சோகத்தில் இளைஞர்கள்..!

அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் விசா கிடைப்பதில் பெரும் போட்டி இருக்கும் காரணத்தால் கனடாவுக்கு அதிகப்படியான இந்தியர்களை அனுப்பி வருகிறது. இதேபோல் கனடா அரசு கடந்த சில வருடங்களாக வேலைவாய்ப்புக்கான விசாவில் செய்த மாற்றங்கள் ஐடி துறையை மட்டும் அல்லாமல் பல பிரிவுகளில், துறைகளில் இருக்கும் இந்தியர்களைக் கனடாவுக்குக் குடும்பத்துடன் செல்ல ஆசையைத் தூண்டியது.

இந்த நிலையில் கனடா குடிவரவு துறை அமைச்சரான மார்க் மில்லர்-ன் பேச்சு பலருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொண்டு விசா-வுக்காக காத்திருக்கும் பலர் பெரும் சிக்கலை எதிர்கொள்ள உள்ளனர்.

கனடா அரசின் இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் இந்திய அரசு இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டு அரசு தலைவர்களை அதிகளவில் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியர்களின் விசா விண்ணப்பத்தைப் பிராசஸ் செய்யும் வேகத்தைத் தற்காலிகமாகக் குறைக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் மார்க் மில்லர்.

இந்தியாவில் இருந்த 62 கனடா நாட்டின் உயர் அதிகாரிகளில் சுமார் 41 பேரை அவர்களது குடும்பத்துடன் (42 பேர்) இந்திய அரசு வெளியேற்றியுள்ளதாக வியாழக்கிழமை கனடா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் Mélanie Joly தெரிவித்தார். மேலும கனடா அரசு தரப்பில் இருந்து சண்டிகர், மும்பை, பெங்களூர் ஆகிய அலுவலகங்களில் நேரடி சேவைகளை முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது என Mélanie Joly தெரிவித்தார்.

இந்த அனைத்து பிரச்சனைக்கும் ஆரம்பம், கனடா குடியுரிமை கொண்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் மரணத்தில் இந்திய அரசுக்குத் தொடர்புடையதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியத்தில் இருந்து இந்தியா - கனடா மத்தியில் நட்புறவில் பெரிய விரிசல் ஏற்படத் துவங்கியது.

இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் இந்திய அரசு கனடாவில் இருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்கவும், குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இதனால் கனடாவில் இருக்கும் இந்தியர்கள் அச்சத்துடனே தினசரி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்கக் கனடாவில் வேலை, வாழ்க்கை, குடும்பம் எனப் பெரும் கனவுடன் இருக்கும் இந்திய மக்களுக்குப் பேரதிர்ச்சியாக முக்கிய அறிவிப்பு அந்நாட்டு அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+