உலகின் சைபர் மோசடிகள் நடப்பது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. கிட்டத்தட்ட அனைவருக்கும் பல்வேறு சாக்குப்போக்குகளின் கீழ் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வருகின்றன. இதனால் ஒவ்வொருவரும் மிகுந்த கவலையுடனும், எச்சரிக்கையுடனும் இருக்கிறார்கள். அப்படி வரும் அழைப்புகளுக்கு பதிலளித்தால் அதில் நடக்கும் ஒரு சிறிய தவறு கூட வங்கிக் கணக்கை முடக்கிவிடும்.
அந்த வகையில், கனடாவில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவத்தில், கனடாவில் லாரன் கெசெல் என்ற பெண்ணுக்கு தனக்கு சேர வேண்டிய சொத்து குறித்த ஒரு அழைப்பு வந்துள்ளது. அதனை அவர் ஸ்கேம் கால் என நினைத்து அவரது பரம்பரை உறவை இல்லை என்று மறுத்து அந்த சொத்தை இழக்க இருந்த நிலையில், அதனை திரும்ப பெற்றுள்ளார். இதில் என்ன ட்விஸ்ட் நடந்தது தெரியுமா?

தி டெய்லி ஸ்டாரின் அறிக்கையின்படி , கனடாவைச் சேர்ந்த லாரன் கெசெல் என்ற பெண்ணுக்கு 400,000 பவுண்டுகள் அதாவது இந்திய ரூபாயில் ரூ. 4.22 கோடி மதிப்புள்ள இங்கிலாந்தில் தனது தாய்வழி மாமா தனக்குச் சொந்தமான சொத்துக்களை விட்டுச் சென்றதாகக் கூறி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அறுபது வயதான லாரன் கெசெல் என்பவர் UK எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், அவரது தாயின் உறவினர் செப்டம்பர் 2021 இல் காலமானார் என்றும், 400,000 பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு வீட்டை விட்டுச் சென்றதாகவும் அந்த அழைப்பாளர் தெரிவித்துள்ளார். அழைப்பாளர் அந்த பெண்ணிடம் நீங்கள் மட்டுமே வாரிசு என்று கூறினார். அந்த மாமா ரேமண்ட், திருமணமாகாத அதாவது குழந்தைகளைப் பெறாத தொலைதூர தாய் மாமா என்று கூறப்பட்டது.
அவர், ஏர்லைன் கேபின் குழு உறுப்பினராக பணிபுரியும் போது, ரேமண்ட் ட்விக்கன்ஹாமில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட பிளாட் ஒன்றை வாங்கியிருந்தார். நெருங்கிய உறவினர்கள் இல்லாததால், லாரன் சரியான வாரிசாக அடையாளம் காணப்படும் வரை, சொத்து உரிமை கோரப்படாமல் இருந்தது. ரேமண்டுடன் லாரனின் தொடர்பை உறுதிசெய்து, குடும்ப உறவுகளை கண்டுபிடித்ததாக நிறுவனம் பெண்ணிடம் கூறியது.
லாரன் முதலில் இந்த அழைப்பு மோசடியானது என்று சந்தேகமாக நினைத்துள்ளார். இது பணம் பறிக்கும் வேலையாக இருக்காலம் என்று லாரன் மகனும் அவளை எச்சரித்துள்ளார். லாரனின் தாயார் 1951 இல் கனடாவுக்குச் சென்றுவிட்டதாலும், லாரன் தனது படிப்பின் போது இங்கிலாந்தில் இரண்டு வருடங்கள் மட்டுமே வசித்து வந்ததாலும், அவர் இதனை நம்பவில்லை.
ஆனால், அந்த நிறுவனமோ குடும்ப வரலாற்றின் விரிவான விவரங்களை வழங்கியது. ரேமண்ட் அவரது தாயின் உறவினர் என்றும், அவரது தாய்வழி தாத்தா ரேமண்டின் தாயின் சகோதரர் என்றும் விளக்கமளித்தது. எனவே, லாரனை அவரது முறையான மருமகள் ஆக்கினார். இதில் முக்கியமாக, அழைத்த நபர் எந்தப் பணத்தையும் கேட்கவில்லை. எனவே லாரனுக்கு இது மோசடி பற்றிய அவரது கவலையைப் போக்க உதவியது.அவரது சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில், லாரன் இப்போது சொத்தை உரிமை கோர தயாராகி வருகிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications