முன்னணிப் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் விதமாக,ஜூன் 1, 2025 அதாவது இன்று முதல் தனது அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தேவைகளை (Minimum Balance Requirements) நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதி மாற்றம், வழக்கமான, சம்பளம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) கணக்குகள் உட்பட அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் பொருந்தும் என்பதால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்குப் பெரும் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து கணக்கு வகைகளுக்கும் ஜீரோ அபராதம்: இதுவரை, கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் சராசரி மாதாந்திர இருப்பை (Average Monthly Balance - AMB) ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் குறையாமல் வைத்திருக்க வேண்டியிருந்தது. எடுத்துக்காட்டாக, நகர்ப்புறக் கிளைகளில் ரூ.2,000, சிறு நகரக் கிளைகளில் ரூ.1,000, மற்றும் கிராமப்புறக் கிளைகளில் ரூ.500 என AMB பராமரிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த இருப்பைப் பராமரிக்கத் தவறினால், அபராதக் கட்டணங்கள் விதிக்கப்பட்டு வந்தன.

ஆனால், ஜூன் 1, 2025 முதல், இந்தக் கட்டணங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. கனரா வங்கி தனது X பக்கத்தில், சுதந்திரத்தை உணருங்கள், வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளது. ஜூன் 1, 2025 முதல், குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்காததற்கு கனரா வங்கி எந்த அபராதமும் விதிக்காது. அனைத்து சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும்! என்று பதிவிட்டுள்ளது. இதன் மூலம், கனரா வங்கி, உலகளவில் உண்மையான பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்குகளை வழங்கும் முதல் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நன்மை: இந்த நடவடிக்கையின் மூலம், கனரா வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் லட்சக்கணக்கானோர் இனி தங்கள் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்காததற்காக அபராதங்களைச் சந்திக்க நேரிடாது. இந்தப் புதிய கொள்கையின் மூலம், கனரா வங்கி சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் இப்போது அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கும் 'குறைந்தபட்ச இருப்புக்கு அபராதம் இல்லை சராசரி மாதாந்திர இருப்பு தொடர்பான அபராதங்கள் அல்லது கட்டணங்கள் இல்லாமல் உண்மையான முறையில் அனுபவிப்பார்கள்,என்று வங்கி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய விதி, சம்பளம் வாங்கும் ஊழியர்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் புதிய கணக்கு வைத்திருப்பவர்கள் உட்படப் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும். இது தினசரி வங்கிச் சேவையை எளிதாகவும், எவ்வித அபராதக் கட்டணங்களும் இன்றி அணுகக்கூடியதாகவும் மாற்றும். நிதிச் சேவைகளை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கான ஒரு முக்கியப் படியாக இது பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, சிறிய சேமிப்பாளர்கள் மற்றும் பல்வேறு சலுகை இல்லாதப் பிரிவினரின் வங்கிச் சேவையை மேலும் எளிதாக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications