இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கி MCLR (marginal cost of fund-based lending rates) விகிதத்தை குறைத்துள்ளது. இதனால் இந்த வங்கியில் கடன் வாங்கி இருப்பவர்களின் இஎம்ஐ குறையப் போகிறது.
கனரா வங்கியில் மிதக்கும் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் , வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்கி இருக்க கூடிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஈஎம்ஐ கணிசமான அளவு குறைய போகிறது. நவம்பர் 12ஆம் தேதியிலிருந்து இந்த புதிய MCLR விகிதங்கள் நடைமுறைக்கு வந்து விட்டன என கனரா வங்கி அறிவித்திருக்கிறது.

MCLR என்பது வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க அனுமதிக்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதம் என கூறலாம். இதனை வங்கி வழங்கும் அனைத்து கடன்களுக்குமான பெஞ்ச்மார்க் வட்டி விகிதம் என அழைக்கிறார்கள். ஒரு வங்கியின் நிதி செலவுகள், செயல்பாட்டு செலவுகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தான் இந்த MCLR என்பது கணக்கிடப்படும்.
பொதுவாக மிதக்கும் வட்டி விகிதங்களில் கடன் வாங்கியவர்களுக்கு எம்சிஎல்ஆரில் ஏற்படக்கூடிய மாற்றம் நேரடியாக அவர்களுடைய இஎம்ஐ-யில் தாக்கத்தை ஏற்படுத்தும். MCLR விகிதம் குறைந்தால் இஎம்ஐ குறையும் , MCLR விகிதம் அதிகரித்தால் இஎம்ஐ அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது கனரா வங்கி எம்சிஎல்ஆர் விகிதங்களை மாற்றி அமைத்து இருக்கிறது .
வழக்கமாக MCLR குறையும் போது நமக்கான மாதாந்திர இஎம்ஐ தொகை குறையலாம் அல்லது கடன் செலுத்தக்கூடிய காலத்தை நாம் குறைத்துக் கொள்ளலாம். இரண்டுமே கடன் வாங்கியவர்களுக்கு லாபம் தரக்கூடிய விஷயம். கனரா வங்கி அறிவிப்பின் படி தங்களுடைய எம்சிஎல்ஆர் விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.05 சதவீதம் குறைத்து இருக்கிறது .
இதன் மூலம் ஓவர்நைட் எம்சிஎல்ஆர் விகிதம் என்பது 7.95 சதவீதத்திலிருந்து 7.90 சதவீதமாக குறைந்து இருக்கிறது . ஒரு மாதத்திற்கான எம்சிஎல்ஆர் 8 சதவீதத்தில் இருந்து 7.95% ஆக குறைக்கப்பட்டுள்ளது .மூன்று மாதங்களுக்கான எம் சி எல் ஆர் விகிதம் 8.20 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக குறைந்திருக்கிறது .ஆறு மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 8.55% இல் இருந்து 8.50 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது.
இதே போல ஓராண்டு , இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான MCLR விகிதங்களும் ஐந்து அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே கனரா வங்கியில் மிதக்கும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கி இருக்க கூடிய நபர்கள் உடனடியாக வங்கி மேலாளர்களை தொடர்பு கொண்டு தங்களின் வட்டி விகிதம் மற்றும் மாதாந்திர இஎம்ஐ எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.அதே வேளையில் பேங்க் ஆப் பரோடா , ஐடிபிஐ உள்ளிட்ட வங்கிகள் தங்களுடைய எம்சிஎல்ஆர் விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications