டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் பல நன்மைகள் உண்டு. ஆனால் மறைமுகமாக இதனால் சில பிரச்சனைகளும் உண்டு. அது என்ன என்று என்றேனும் யோசித்திருப்போமா?
உதாரணத்திற்கு ஒரு கடைக்கு செல்கிறோம். அங்கு ஒரு பொருளை வாங்கிக் கொண்டு மீதி சில்லறை வாங்கும்போது 1 ரூபாய் சில்லறை இல்லை, 2 ரூபாய் சில்லறை இல்லை. 1 ரூபாய்க்கு ஏதாவது வாங்கிக் கொள்ளுங்கள் என கடைக்காரர் கூறுவதுண்டு. அந்த மீத சில்லறைக்கு குழந்தைகளுக்கு ஏதேனும் மிட்டாய் வாங்கிக் கொடுப்போம்.
பொதுவான இந்த போக்கு பரவலாக சிறு நகரங்கள் தொடங்கி, பெரு நகரங்கள் வரையில் இருந்து வருகின்றன.
யுபிஐ பரிவர்த்தனை
இது சிறு வியாபாரிகளுக்கு ஒரு வியாபார யுக்தியாகவும் கூட இருந்தது எனலாம். ஆனால் இன்று அப்படியில்லை 10 ரூபாய் பால் பாக்கெட் வாங்கினால் கூட, அதனை யுபிஐ மூலம் பேமெண்ட் கொடுக்கிறோம்.
இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையானது கொரோனாவின் வருகைக்கு பிறகு கணிசமான அதிகரித்துள்ளது.
கொரோனா காலத்தில் அதிகரிப்பு
கொரோனா காலத்தில் மக்கள் வெளியே வர தயங்கிக் கொண்டு, ஆன்லைனிலேயே வாங்கி கொண்டனர். அப்படியே வெளியே அத்தியாவசிய தேவைக்கு வந்தாலும் கூட, பாதுகாப்பு கருதி மற்றவர்கள் கைகளில் இருந்து பணத்தை பெறக் கூடாது என்பதற்காக யுபிஐ பேமெண்ட் செய்தனர்.
அனைத்து இடங்களிலும் யுபிஐ
இந்த போக்கானது தற்போது கிராமப்புற கடைகளிலும் கூட அதிகரித்துள்ளது. இது மக்கள் கடைகளில் பணம் கொடுத்து பொருளை வாங்கும் நிலையை மாற்றியுள்ளது. இதனால் மிட்டாய் விற்பனையும் குறைந்துள்ளது. இந்த மிட்டாய் நடைமுறையானது சிறு மளிகை கடை தொடங்கி மெடிக்கல் ஷாப், உணவகம் வரையில் அனைத்து இடங்களிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது.
மிட்டாய் விற்பனை சரிவு
மொத்தத்தில் கொரோனாவின் வருகைக்கு பிறகு மிட்டாய்களின் விற்பனையானது கணிசமான சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக யுபிஐ பேமெண்ட்-ஆல் இன்று கணிசமான சரிவினைக் கண்டுள்ளது. இது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமாக இருந்தாலும், யுபிஐ சேவை மிட்டாய் வணிகத்திற்கு போட்டியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2010 - 2020 நிலவரம்
இது குறித்து கிரெட் மற்றும் டன்சோவின் வளர்ச்சி தலைவர் அபிஷேக் பாட்டீல் தனது லிங்கிட் இன் பக்கத்தில் விவரித்துள்ளார்.
2010-களில் மார்ஸ், நெஸ்டில், பார்லி, ஐடிசி, மொண்டலெஸ், ஃபெர்பெட்டி வான் மெல்லே உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியினை கண்டு வந்தன. ஆனால் 2020 வாக்கில் இந்த பிராண்டுகள் பலவும் சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக மிட்டாய் விற்பனையில் சரிவினைக் கண்டுள்ளன. உலகின் மிகப்பெரிய மிட்டாய் சந்தையான இந்தியாவில், கொரோனாவின் வருகைக்கு பிறகு பெரும் சரிவினைக் கண்டுள்ளது.
சிறு துளி பெருவெள்ளம்
இது ஒரு சிறிய விஷயம் என்றாலும், இன்றும் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாக உள்ளது. இவ்வாறு சில்லறைகளுக்கு கொடுக்கப்படும் மிட்டாய்கள் சிறிய தொகையாக இருந்தாலும், இந்தியா முழுவதுமே இந்த நடைமுறை இருந்து வந்தது. ஆக இதுவே மிட்டாய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய லாபமாக இருந்தது. ஆனால் இன்று அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.
அடுத்த கட்ட நடவடிக்கை?
மிட்டாய் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு நிதி நிறுவனங்கள், போட்டியாளராக இருப்பார்கள் என்று நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இது உண்மை தான். இதனை நீங்கள் கவனிக்க வேண்டும். இது நேரடி போட்டி இல்லை என்றாலும், நிச்சயம் மிட்டாய் உற்பத்தியாளர்களுக்கு யுபிஐ நிறுவனங்கள் போட்டியாளார்கள் தான். ஆக தற்போது மிட்டாய் உற்பத்தியாளர்கள் அடுத்த கட்டத்தினை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications