கேன்ஸ் திரைப்பட விழா என்பது பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் என்னும் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா ஆகும். இது சினிமா மற்றும் இசை துறையை சார்ந்தவர்களுக்கு பெரும் திருவிழா போன்றது, இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருவது மட்டும் அல்லாமல் மிகவும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.
கேன்ஸ் திரைப்பட விழா 76வது பதிப்பு மே 16 முதல் மே 27, 2023 வரை நடைபெற உள்ளது. கேன்ஸ் திரைப்பட விழா முதன் முதலில் 1946 இல் கலை துறையில் சாதனை படைத்தவர்களை அங்கீகரிப்பதற்காக நடத்தப்பட்டது. திரைப்பட துறையில் கலை மற்றும் செல்வாக்கு மிகுந்தவர்கள் மத்தியிலான ஒரு சந்திப்பை உருவாக்க இந்த விழா உருவானது.

ஆனால் இன்று திரைப்படத்தை தாண்டி கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆடம்பரமான ஃபேஷன் மற்றும் நேர்த்தியான ஆடைகளை உலகிற்கு காட்டும் ஒரு இடமாக மாறியுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது தான் தற்போது முக்கியமான நிகழ்வாக மாறியுள்ளது.
உலகிளவில் மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்றாக இருப்பதால் நடிகை, நடிகர்கள் மட்டும் அல்லாமல் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிரபலங்கள் இவ்விழாவுக்கு வருகின்றனர்.
இன்று துவங்க இருக்கும் 76வது கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் மன்றத் தலைவராக ரூபன் ஆஸ்ட்லண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவின் ஒரு டிக்கெட் விலை 5 லட்சம் முதல் 25 லட்சம் வரையில் இருக்கும்.
கேன்ஸ் திரைப்பட விழா பொதுவாக பத்திரிகையாளர்கள் மற்றும் திரைப்படத் துறை வல்லுநர்கள் போன்ற சினிமா துறையில் அங்கீகாரம் பெற்ற நபர்களுக்கானது. இதனால் ஆரம்பத்தின் உச்சத்தில் தான் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கும். இதனால் டிக்கெட் விலையும் அதிகம் தான்..
VIP Concierge இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் படி, இந்த சினிமா திருவிழாவுக்கான பேட்ஜ்கள் உள்ளவர்கள் 6,100 டாலர் முதல் 25000 டாலர் வரையிலான தொகைக்கு டிக்கெட் பெறலாம். இந்திய ரூபாய் மதிப்பில் 5.1 லட்சம் ரூபாய் முதல் 20.5 லட்சம் ரூபாய் வரையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications