பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் மூலதன செலவினங்களை மேற்கொள்வதில் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தது.
மேலும் கடந்த சில பட்ஜெட்டுகளில் மூலதன செலவினங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்த சூழலில், இனிமேல் வளர்ச்சிக்காக மூலதன செலவினங்கள் அதிகரிப்பை மட்டுமே நம்பி கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது, நுகர்வை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகும் என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உணர்ந்து கொண்டுள்ளார்.

இதனால் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், வரி குறைப்பு உள்ளிட்ட நுகர்வை அதிகரிக்கும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
பொருளாதார வளர்ச்சிக்கான பாதையை மோடி அரசு மாற்றி கொண்டிருப்பது மத்திய பட்ஜெட்டில் தெள்ள தெளிவாக தெரிகிறது. இதன் தாக்கம் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. உதாரணமாக இன்று பங்குச் சந்தையில் எஃப்எம்சிஜி இன்டெக்ஸ் 3 சதவீதம் ஏற்றம் கண்டது. ராடிகோ கேத்தான், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட் போன்ற பங்குகளின் விலை கிடுகிடுவென ஏற்றம் கண்டது.
மேலும், நுகர்வோர் சார்ந்த பங்குகளான ஐடிசி, டிரெண்ட், டாடா கன்ஸ்யூமர் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. அதேசமயம், மூலதன செலவினங்களுடன் தொடர்புடைய எல் அண்ட்டி மற்றும் சீமென்ஸ் உள்ளிட்ட பங்குகள் அடி வாங்கின.
எதிர்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மூலதன செலவினங்களுக்காக ரூ.11.2 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை காட்டிலும் சிறிது மட்டுமே உயர்வாகும். மேலும், இது எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் குறைவாகும். அதேசமயம், நடுத்தர வர்த்தகத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்க வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த பட்ஜெட் நுகர்வோரை பொருளாதார வளர்ச்சியின் மையமாக நிறுத்துவதால், மோடி பங்குகள் என்றழைக்கப்படும் மூலதன செலவினங்கள் தொடர்புடைய பங்குகளின் எழுச்சியின் நீடித்த நிலைப்புத்தன்மை குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. மறுபுறம், எஃப்எம்சிஜி, ஆட்டோ மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறையை சேர்ந்த பங்குகள் லைம் லைட்டில் உள்ளன.
டிரஸ்ட் மியூச்சுவல் பண்டின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்லா கூறுகையில், வளர்ச்சிக்கான அதிகாரம் இப்போது இந்திய நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதால், அது இப்போது இந்திய நடுத்தர வர்க்கத்தின் மீள்தன்மை மற்றும் தனியார் துறையின் ஆர்வம் ஆகியவை இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை நிர்ணயிக்கும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications