பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும் இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை வைத்திருக்கும் கேப்ஜெமினி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக சிங்கப்பூரை தளமாகக் கொண்டு, இந்தியரால் உருவாக்கப்பட்ட கிளவுட்4சி என்னும் நிறுவனத்தை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
கிளவுட்4சி நிறுவனம் ஹைப்ரிட் மற்றும் சவ்ரின் கிளவுட் கட்டமைப்பில் இயங்கும் ஆட்டோமேஷன் சேவைகளை அளிப்பதில் முன்னோடியாக திகழ்கிறது.

கேப்ஜெமினியின் கிளவுட்4சி நிறுவனத்தை வாங்குவது மூலம், வேகமாக வளர்ந்து வரும் கிளவுட் கம்பியூட்டிங் சேவைகள் சந்தையில் கேப்ஜெமினியின் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதை தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் சேவைகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இத்துறையில் அதிகப்படியான வர்த்தகத்தை பெற கிளவுட்4சி நிறுவனம் பெரிய அளவில் உதவும் என கேப்ஜெமினி தீவிரமாக நம்புகிறது.

2014ஆம் ஆண்டில் ஸ்ரீதர் பின்னபுரெட்டி என்பவரால் நிறுவப்பட்டது தான் இந்த கிளவுட்4சி நிறுவனம். தற்போது இந்நிறுவனத்தில் 1,600 பேர் கொண்ட பிரம்மாண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் ஏஐ ஆப்ரேஷன்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் கில்லி-யாம்.
ஸ்ரீதர் பின்னபுரெட்டி, கிளவுட்4சி-யுடன் சேர்ந்து, CtrlS தரவு மைய நிறுவனத்தையும் வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், கேப்ஜெமினி 3.3 பில்லியன் டாலர் மதிப்பில் WNS என்ற பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் கையகப்படுத்துவதாக அறிவித்தது. இந்த தொடர் கையகப்படுத்தல்கள், கேப்ஜெமினியின் உலகளாவிய தொழில்நுட்ப சேவைகளில் தனது நிலையை வலுப்படுத்துவதற்கு தீவிரமாக உள்ளதை காட்டுக்கிறது.


Click it and Unblock the Notifications