சென்னை: இந்தியாவின் வர்த்தக பிரிவில் ஐடி சேவைத்துறை மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில், இத்துறையை மேம்படுத்தப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மத்திய அரசு பெங்களூர்-க்கு இணையாக ஒரு ஸ்டார்ட்அப் டெக் சிட்டி உருவாக்கும் முயற்சியில் இருக்கும் வேளையில், மாநில அரசுகள் புதிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.
இந்தியாவில் அதிகப்படியான ஜிசிசி நிறுவனங்கள் வரும் வேளையில் ஐடி சேவைத் துறையின் ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது எனக் கருத்து நிலவுகிறது. ஆனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் இதை ஒரு ஆரோக்கியமான மாற்றமாகக் கருதுகின்றனர்.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இருந்தாலும் இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை வைத்துக்கொண்டு இயங்கும் ஐடி நிறுவனமான கேப்ஜெமினி, அதன் 1.7 லட்சம் ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு முதலீட்டு வாய்ப்பை கொடுத்துள்ளது.
ஒரு நிறுவனம் தனது வர்த்தகத்தையும், ஊழியர்களையும் நீண்ட கால வளர்ச்சிப் பாதையில் வைக்க வேண்டும் என்பதற்காகக் கையில் எடுக்கும் திட்டம் தான் ESOP திட்டம். இந்த திட்டம் மூலம் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளைக் கொடுத்து நிறுவனத்துடனான உறவை மேம்படுத்தும். இத்தகையை முயற்சியை அனைத்து நிறுவனங்களும் கையாளும்.
இதில் கேப்ஜெமினி ஒரு படிக்கு மேல் சென்று, தனது 11வது ஊழியர் பங்கு உரிமை திட்டத்தில் (ESOP) அனைத்து தரப்பு ஊழியர்களும் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ESOP பங்குகளை வாங்கக் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ள அனைத்து ஊழியர்களும் பங்குகளை வாங்கத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத் தொடர்ந்து ESOP இல் பங்கேற்க, தேவையான குறைந்தபட்ச முதலீடு 100 யூரோக்கள், இது சுமார் ரூ.9,000 மட்டுமே. கேப்ஜெமினி ESOP திட்டத்தைக் குறித்துக் கூறுகையில், ஊழியர்கள் அதிகபட்சமாகத் தனது ஆண்டு சம்பளத்தில் 25% தொகையை முதலீடு செய்து ESOP திட்டத்தின் வாயிலாகப் பங்குகளை வாங்க முடியும்.
இந்த அடிப்படைத் தகுதியை வைத்துப் பார்க்கும் போது ESOP திட்டத்தில் சுமார் 97% ஊழியர்களைப் பங்கேற்கும் தகுதியை வைத்துள்ளனர். இந்த திட்டத்தின் வாயிலாக கேப்ஜெமினி தனது ஊழியர்களுக்கு 27 லட்சம் பங்குகள் வரை விற்பனை செய்ய அனுமதிக்கிறது.
திட்டத்தின் கீழ், ஊழியர்கள் யூரோக்களில் முதலீடு செய்வார்கள், மேலும் இந்த முதலீட்டின் வாயிலாகப் பங்குகளை வாங்குவோர் ஐந்து ஆண்டுகளுக்கு லாக்இன் காலத்தைக் கொண்டு இருக்கும். இந்த காலத்தின் போது, அவர்கள் கேப்ஜெமினியின் பங்குகளில் ஏற்படும் விலை உயர்வின் மூலம் நேரடியாகப் பலன் அடைவார்கள்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications