பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐடி சேவைகள் நிறுவனமான Capgemini பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும் இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களைக் கொண்டு உலகளவில் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்திய ஐடி சேவை நிறுவனங்களுடன் போட்டிப்போட்டு Capgemini தொழில்நுட்ப சேவைகள் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகிய பிரிவில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று வந்தாலும், அதன் பெரும்பாலான வர்த்தக வாடிக்கையாளர்கள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவை.

கேப்ஜெமினி சென்னையில் ஏற்கனவே 2 கேம்பஸ் வைத்திருக்கும் வேளையில் தற்போது இதை விரிவாக்கம் செய்யும் முக்கியமான திட்டத்தில் இறங்கியுள்ளது. இதன் மூலம் சென்னை கேம்ஜெமினி அலுவலகத்தில் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக உள்ளது.
சென்னை சிறுசேரி சிப்காட்டில் உள்ள கேப்ஜெமினி வளாகத்தின் விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுமார் 10 லட்சம் சதுர அடி அலுவலகம் கட்டுமான பணிகள் நடக்க உள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் சென்னை சிறுசேரி கேப்ஜெமினி அலுவலகத்தில் சுமார் 5,500 பேருக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
மேலும் இப்புதிய விரிவாக்க பணிகளைக் கேப்ஜெமினி, வாஸ்கான் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 416 கோடி ரூபாய்க்கு, 30 மாதங்களில் முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதத்தில் மட்டும் சென்னையிலஸ் சுமார் 6.5 மில்லியன் சதுரடி பரப்பளவிலான அலுவலக இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. இது 2022 மொத்த அளவை காட்டிலும் அதிகம். நாட்டின் மொத்த ஆபீஸ் ரியல் எஸ்டேட் துறை தேவையில் சென்னை மட்டுமே 15 சதவீதம் தீர்த்துள்ளது.
ஒட்டுமொத்த இந்திய ஆபீஸ் ரியல் எஸ்டேட் துறையில் சென்னை தான் டாப்பாக உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வட இந்தியாவில் கொண்டாப்படும் மும்பை, டெல்லி என்சிஆர் பகுதிகளையும், தென்னிந்தியாவில் சென்னை, ஹைதராபாத் நகரங்களையும் ஓடவிட்டுச் சென்னை முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications