இந்திய ஐடி சேவைத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் பல நாடுகளில் வர்த்தகம் மற்றும் சேவை அளித்து வரும் கேப்ஜெமினி முக்கியமான தகவல்களை வெளியிட்டு அசத்தியுள்ளது.
ஐடி சேவைகளுக்கு, குறிப்பாகக் குறைந்த செலவில் மேம்பட்ட சேவை அளிப்பதில் இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும் பெயர்போனவை. இப்படியிருக்கையில், உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் பல வெளிநாட்டில் வர்த்தகத்தை அதிகளவில் வைத்திருந்தாலும் இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களை வைத்துள்ளது.
இதில் முக்கியமான நிறுவனம் தான் கேப்ஜெமினி..
கேப்ஜெமினி
பிரான்ஸ் நாட்டு நிறுவனமான கேப்ஜெமினி-யின் சிஇஓ-வான ஐமன் எசத் இந்தியா மற்றும் இந்திய ஊழியர்களைப் பற்றிக் கூறும் போது, கேப்ஜெமினி நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 50 சதவீதம் இந்திய ஊழியர்கள் தான், இந்திய அலுவலகம் தற்போது மிகப்பெரிய இன்னோவேஷன் சென்டராக மாறிய நிலையில் கேப்ஜெமினிக்கு வளர்ச்சி மட்டுமே அளிக்கும் தளமாக மாறியுள்ளது எனப் பெருமையுடன் கூறியுள்ளார்.
உயர் அதிகாரிகள்
கேப்ஜெமினி நிறுவனத்தில் டிசம்பர் 2021 முடிவில் மொத்தம் 3,24,700 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர், இதில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள். மேலும் கேப்ஜெமினி நிறுவனத்தில் பல உயர் அதிகாரிகள் இந்தியர்களாக இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
இன்று உயர் அதிகாரிகள் அடுத்த 5 -10 வருடத்தில் ஒரு இந்தியர் கேப்ஜெமினியின் சிஇஓ-வாகக் கூட இருக்கலாம்..? நீங்க என்ன நினைக்கிறீர்கள் கமெண்ட் பண்ணுங்க...
ஐமன் எசத்
நாஸ்காம் டெக்னாலஜி அண்ட் லீடர்ஷிப் போரம் 2022 நிகழ்ச்சியில் பேசிய கேப்ஜெமினி-யின் சிஇஓ-வான ஐமன் எசத்.இன்று நிறுவனத்தில் 50 சதவீத ஊழியர்களை இந்தியர்களைக் கொண்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறோம், விரைவில் பல புதிய பிரிவில் ஊழியர்களைப் பணியில் அமர்த்த உள்ளோம் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
இன்னோவேஷன் லேப்ஸ்
கேப்ஜெமினி ஏற்கனவே இந்தியாவில் இன்னோவேஷன் லேப்ஸ் வைத்துள்ள நிலையில், இந்த ஆண்டு இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், ஸ்மார்ட் பேக்ட்ரி, இன்டலிஜென்ட் சப்ளை செயின் ஆகிய பிரிவில் சென்டர் ஆப் எக்சலென்ஸ் அமைக்க உள்ளதாகவும் கேப்ஜெமினி-யின் சிஇஓ-வான ஐமன் எசத் தெரிவித்துள்ளார்.
இந்திய ஐடி சேவை துறை
2022ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி துறையின் மொத்த வருவாய் அளவு முதல் முறையாக 200 பில்லியன் டாலரை தாண்டி 227 பில்லியன் டாலர் அளவீட்டை தொடும் எனக் கணித்துள்ளது நாஸ்காம்.
இதேபோல் 2022ஆம் நிதியாண்டில் 4,50,000 பேர் புதிதாக வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்து உள்ளது.


Click it and Unblock the Notifications