டெல்லி: பிரெஞ்சு பன்னாட்டு தொழில்நுட்ப சேவைகளின் முக்கிய நிறுவனமான கேப்ஜெமினி, இந்தியாவில் கிட்டதட்ட 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சி மற்றும் இந்த நிறுவனத்தின் சில ஃபுராஜக்டுகள் ஃபெயிலியர் ஆனதை தொடர்ந்து, இந்த நிறுவனம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனாலேயே இந்த நிறுவனம் மறுதிறன், பணியமர்த்தல் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவை இந்த சீரமைத்தலின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இது உலகளவில் அதன் பலத்தில் பாதிக்கும் மேலானது என்று கூறப்படும் நிலையில் இந்த பணி நீக்கமானது, உலக அளவில் சற்று கவலையையே ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் என்ற வகையில், எங்கள் ஊழியர்கள் தான் எங்கள் வணிகத்தின் மையம். மேலும் வளர்ந்து வரும் டிஜிட்டல் உருமாற்றத் தேவைகளுக்கு புதிய திறன்களை உருவாக்குவதற்காக நாங்கள் பரவலாக மறுதிறன்களை திட்டங்களை பரவலாக உருவாக்கி வருகிறோம்.
மேலும் இந்தியாவில் எங்களது நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் 2020ம் ஆண்டிற்கான முன்னோக்கு அழகாக இருக்கின்றன என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த பணி நீக்கத்திற்கு முன்பு இந்த நிறுவனம் 90 நாட்களுக்கு முன்பே ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் கார்ப்பரேட் நிலைக்கு மாற்றப்படுகிறார்கள். அங்கு நிறுவனத்தின் வணிக பிரிவுகள் அவர்களுக்காக சில திட்டங்களை வைத்து மறுதிறன் செய்ய முயற்சிக்கின்றன. இதில் தேர்வானர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்களை இறுதியில் நிறுவனத்தை விட்டு வெளியேறும் படி கேட்கப்படுகிறார்கள் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தொழில்நுட்ப சேவை துறை வளர்ந்து வரும் வருவாயை தக்கவைத்துக் கொள்ள சிரமப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஒரே தொழில்நுட்ப நிறுவனம் கேப்ஜெமினி மட்டும் அல்ல. கடந்த மாதம் காக்ணிசண்ட் நிறுவனம் தனது 10,000 - 12,000 மூத்த அதிகாரிகள் மற்றும் நடுத்தர ஊழியர்களை பணிநீக்கம் செய்யபோவதாக அறிவித்தது. மேலும் இதில் 5,000 பேரை மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகவும், ஆக நிகர பணியிழப்பு 5,000 - 7,000 ஆகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது தவிர தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications