ஐடி துறையில் கொரோனாவின் வருகைக்கு பிறகு வேலை வாய்ப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால், அதேசமயம் ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதமானது பெரும் சவாலாக இருந்து வருகின்றது.
இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் அதிகப்படிப்பான ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றன.
கொரோனாவின் பின்னர் பல நாடுகளிலும், பல துறை சார்ந்த நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறின.
கேப்ஜெமினியின் திட்டம்
இதனால் டிஜிட்டல் தேவையானது மிகப் பெரியளவில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் திறன் வாய்ந்த ஊழியர்களூக்கான தேவையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. முன்னதாக டிசிஎஸ், விப்ரோ நிறுவனங்கள் பல ஆயிரம் ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கேப்ஜெமினி நிறுவனம் 65,000 ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக திட்டமிட்டுள்ளது.
எவ்வளவு சம்பளம் அதிகரிப்பு
1.5 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ள இந்த நிறுவனம், இந்தியாவில் 13 இடங்களில் செயல்பட்டு வருகின்றது.
Indeed அறிக்கையின் படி, ஐடி ஊழியர்களுக்கான தேவையானது 400% அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் ஐடி நிறுவனங்கள் முழு நேர ஐடி பொறியாளர்களுக்கு 70 - 120% சம்பளத்தினை அதிகரித்துள்ளது.
டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ
சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு பெண் ஊழியர்களுக்கான அறிவிப்பினை கொடுத்தது. இதே போல இன்ஃபோசிஸ், விப்ரோ மற்ற பெரிய ஐடி நிறுவனங்களும், இந்தியா முழுவதும் பலத்த பணியமர்த்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் திட்டம்
முன்னதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் 35,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டு இருந்தது. இதேபோல விப்ரோ நிறுவனம் 12,000 ஊழியர்களை பணியமர்த்தவும், ஹெச்.சி.எல் டெக் 20,000 - 22,000 ஊழியர்களை பணியமர்த்தவும், இதே போல் டிசிஎஸ் 40,000 ஊழியர்களை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளன.
தேவை அதிகரிக்கலாம்
சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்று, இந்திய வேலை வாய்ப்பு சந்தையில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையானது தொடர்ந்து மிகவும் வலுவாக இருக்கும். அதோடு தொடர்ச்சியாக இந்த துறையானது வளர்ச்சி கண்டு கொண்டே இருக்கும். மேலும் எதிர்வரும் காலங்களில் ஐடி துறையானது மிக கவர்ச்சிகரமானதாக இருக்கும். இதனால் வேலை வாய்ப்பானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கும் என நிபுணர்கள் கூறினர்.
கொரோனாவுக்கு முன்பு
இதற்கிடையில் திறன் வாய்ந்த ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள, நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவுக்கு முன்னதாக ஐடி நிறுவனங்களில் அட்ரிசன் விகிதமானது கணிசமாக குறைந்திருந்தது. ஏனெனில் ஐடி ஊழியர்கள் வேலையினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று, நிறுவனத்தினை விட்டு வெளியேறாமல் இருந்து வந்தனர்.
கொரோனாவுக்கு பின்னர்
ஆனால் கொரோனாவின் பின்னர் டிஜிட்டல் துறையில் தேவையானது அதிகரித்துள்ள நிலையில், வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன. இதனால் ஊழியர்கள் அதிகளவில் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் போராடி வருகின்றன. இன்று முன்னணி ஐடி நிறுவனங்களில் அட்ரிசன் விகிதம் மிக கவலையளிக்கும் விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications