தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தற்போது பெங்களூர்-க்கு இணையாக ஐடித் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, ஸ்டார்ட்அப் முதல் ஐடி சேவைத் துறை வரையில் தொடர்ந்து முதலீடுகளைப் பெற்று வருகிறது. இதன் வாயிலாக நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியிலும், மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபலமான ஐடி சேவை மற்றும் கன்சல்டிங் சேவை நிறுவனமான கேப்ஜெமினி, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. டெக் நிறுவனங்களின் முதலீடுகள் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், கேப்ஜெமினி அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளது.

இந்த முதலீட்டின் வாயிலாக கேம்ஜெமினி சுமார் 6 லட்ச சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ள இந்த புதிய கேம்பஸ்-ல், 5000 ஊழியர்கள் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த கேம்பஸ் கட்டி முடிக்கப்படும் கேப்ஜெமினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், கேம்ஜெமினி தற்போது அறிவிக்கப்பட்ட முதலீட்டில் சுமார் ரூ.3 கோடியை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்குவதாகவும் இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இந்த புதிய கேம்பஸ், நவீன ஐடி இன்பராஸ்டக்சர் உடன் இருக்கும் என்று கேப்ஜெமினி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கேம்பஸ்-ல் பைனான்சியல் சர்வீசஸ், இன்ஜினியரிங், டிஜிட்டல், கிளவுட், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்கள் பணிபுரிய இது உதவும். மேலும், இந்த வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட இன்ஜினியரிங் லேப்ஸ், வாடிக்கையாளர் சேவை மையங்கள் என தனித்தனி பகுதிகள் மற்றும் சிறப்பு ஆன்போரிங் அறைகள் இருக்கும் என கேப்ஜெமினி தெரிவித்துள்ளது.
சென்னையில் மிகப்பெரிய ஐடி கேம்பஸ் என்றால் இது டிசிஎஸ் நிறுவனத்தின் சிறுசேரி கேம்ஸ் தான், இதை பீட் செய்ய பல நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் வேளையில் பிரான்ஸ் கேப்ஜெமினி நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் 1000 கோடி முதலீடு செய்ய உள்ளது.
தமிழ்நாட்டில் இன்னோவேஷன் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த முதலீடு காட்டுகிறது என்று கேப்ஜெமினி நிறுவனத்தின் ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் சேவைகளின் தலைவர் விஜய் சந்திரமோகன் கூறினார்.
சென்னையில் அலுவலக இடங்களில் வேகமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டு வருவதைப் பார்க்கையில், தொழில்நுட்ப முதலீடுகளுக்கான உலகளவில் முதன்மையான இடமாக சென்னை உருவாகி வருவது தெரிகிறது. கேப்ஜெமினியின் இந்த உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வளாகம், தமிழ்நாட்டில் இருக்கும் திறன்மிக்க டெக் ஊழியர்களை பயன்படுத்திக்கொள்ள ஆர்வம்காட்டுவதை பிரதிபலிக்கிறது, மேலும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் தமிழ்நாடு அரசின் இலக்கிற்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார்.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications