2024-25 ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலதன ஆதாய வரி விதிப்பில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார். இவை நடுத்தர வர்க்கத்தினருக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆழமாகப் பார்ப்போம்.
மாற்றங்கள் என்ன?:
குறுகிய கால மூலதன ஆதாய வரி: குறிப்பிட்ட சொத்துகளின் மீதான குறுகிய கால மூலதன ஆதாய வரி (Short Term Capital Gains - STCG) 20% ஆக உயர்த்தப்படவுள்ளது. பிற நிதி மற்றும் நிதி அல்லாத சொத்துகளின் குறுகிய கால மூலதன மீதான லாபம், தனிநபரின் வருமான வரி விகிதத்தின்படி கணக்கிடப்படும்.

மூலதன ஆதாய விலக்கு வரம்பு அதிகரிப்பு: ஆண்டு தோறும் ரூ.1.25 லட்சம் வரையிலான மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படவுள்ளது. இது முந்தைய வரம்பை விட அதிகமாகும்.
நீண்ட கால மூலதன ஆதாய வரி வரி (LTCG) உயர்வு: குறிப்பிட்ட சில சொத்துகளின் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long Term Capital Gains - LTCG) 12.5% ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
பட்டியலிடப்படாத பத்திரங்கள் மற்றும் கடன் மியூச்சுவல் பண்டுகள்: பட்டியலிடப்படாத பத்திரங்கள் மற்றும் கடன் மியூச்சுவல் பண்டுகள் மீதான மூலதன ஆதாயம், தற்போதுள்ள வரி விகிதங்களின்படியே தொடர்ந்து கணக்கிடப்படும்.
எளிமைப்படுத்தப்பட்ட வரி விதிப்பு?:
பட்ஜெட் அறிக்கையில் மூலதன ஆதாய வரி விதிப்பை எளிமைப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, சொத்துகளை எவ்வளவு காலம் வைத்திருந்தோம் என்பதைப் பொறுத்து வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.
பட்டியலிடப்பட்ட பத்திரங்களுக்கு (பங்குகள் போன்றவை) - 12 மாதங்கள்
பட்டியலிடப்படாத சொத்துகள் (பத்திரங்கள், கடன் பத்திரங்கள், தங்கம்) - 24 மாதங்கள்
பிற பட்டியலிடப்படாத சொத்துகள்(பட்டியலிடப்படாத பங்குகள், ரியல் எஸ்டேட் போன்றவை) - 24 மாதங்கள் (பழைய அளவீடுகள்)
இதன் மூலம், பட்டியலிடப்பட்ட Listed Business Trust Units முன்னர் இருந்த 36 மாதங்கள் வைத்திருக்கும் காலம் தற்போது 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பத்திரங்கள், கடன் பத்திரங்கள், தங்கம் ஆகியவற்றிற்கான வைத்திருக்கும் காலம் 36 மாதங்களில் இருந்து 24 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கத்திற்கு என்ன பாதிப்பு?:
குறுகிய கால மூலதன ஆதாய வரி உயர்வு: குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுபவர்களுக்கு, அதாவது ஒரு வருடத்திற்குள் பங்குகளை விற்பவர்களுக்கு இந்த வரி உயர்வு பாதகமாக அமையும். குறிப்பாக, பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவதற்காகக் குறுகிய காலத்தில் பங்குகளை வாங்கி விற்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
பங்குச்சந்தை எதிரொலி:
இதன் எதிரொலியாகவே இன்று இந்தியப் பங்குச்சந்தை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 1500 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. மேலும் இந்த மூலதன ஆதாய வரி மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications