டெல்லி: பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து வருமான வரி செலுத்துவோர் மத்தியில் மூலதன ஆதாயங்கள் எப்படி கணக்கீடு செய்யப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டது.
உதாரணமாக ஒரு நபரின் ஒரு ஆண்டு வருமானம் 13 லட்சம் ரூபாய், அதில் 12 லட்சம் ரூபாய் சம்பளம், 1 லட்சம் ரூபாய் மூலதன ஆதாயம் எனும் போது அவருக்கு எப்படி வரி கணக்கிடப்படும்? ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என்ற அறிவிப்பு இவர்களுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் நிதி மசோதா 2025 இன் முக்கிய அம்சங்களை தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மூலதன ஆதாயங்கள் பிரிவு 87A தள்ளுபடி கணக்கிடுவதில் இருந்து விலகளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவலில் தனி நபர்கள் புதிய வரி கணக்கு நடைமுறையில் பிரிவு 115 பிஏசி-ஐ (Section 115BAC) தேர்வு செய்யும் போது சிறப்பு விகிதங்களில் வரி வசூலிக்க தகுதி பெற்ற மூலதன ஆதாயங்கள் உள்ளிட்டவைகளுக்கு பிரிவு 87ஏ வின் கீழ் கிடைக்கும் வரி தள்ளுபடியில் இருந்து விலக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது ஒரு நபர் ஒரு ஆண்டுக்கு 13 லட்சம் ரூபாய் வருமானமாக ஈட்டு இருக்கிறார். அதில் 1 லட்சம் ரூபாய் மூலதன ஆதாயம் எனும் போது இந்த 1 லட்சம் ரூபாய் அந்த மொத்த வருமானமான 13 லட்சம் ரூபாயிலிருந்து கழிக்கப்பட்டு அந்த நபருக்கு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் வருமான வரி கழிவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருமானம் போக மூலதன ஆதாயத்தால் தாங்கள் அதிக வருமானவரி விகிதத்திற்குள் வந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தவர்களுக்கு பதில் கிடைத்துள்ளது.
ஆனால் புதிய வருமான வரி கணக்கு நடைமுறையில் நடைமுறையை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாம் நாம் ஒரு குறிப்பிட்ட முதலீட்டை மேற்கொண்டு அந்த முதலீட்டை விற்பனை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய லாபத்தை தான் மூலதன ஆதாயம் என அழைக்கிறோம்.
உதாரணமாக ஒரு நிறுவனத்தின் பங்கை நீங்கள் 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கி அதனை 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள் எனும் போது 20,000 ரூபாய் லாபம் மூலதன ஆதாயம் ஆகும். குறிப்பிட்ட பங்கை வாங்கி 12 மாதங்களுக்குள் விற்பனை செய்திருந்தால் குறுகிய கால மூலதன ஆதாயம் என கணக்கீடு செய்யப்படுகிறது இதற்கு 20% வரி விதிக்கப்படுகிறது. நீங்கள் 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்து பின்னர் அதனை விற்பனை செய்து லாபமீட்டினால் அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5 சதவீதம் வரி விதிக்கப்படும்.
Story written : Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications