இந்தியாவில் கார் வாங்குவது என்பது ஆடம்பரமான விஷயம் என்பதை தாண்டி தற்போது அடிப்படையான விஷயமாக மாறியுள்ளது. இதனால் அதிகப்படியான மக்கள் தங்களின் நிதி நிலைக்கு ஏற்ப கார்களை வாங்கி வருகின்றனர்.
2024 ஆம் நிதியாண்டில் ஆடம்பர கார்களும் அதிகளவில் விற்பனையாகியுள்ளது, இதேபோல் மலிவு விலை எஸ்யூவி வாகனங்களையும் அதிகளவில் வாங்கி வருகின்றனர். இதன் வாயிலாகவே 2024 ஆம் நிதியாண்டில் கார் விற்பனை சாதனை அளவை கண்டது.

ஆனால் 2025 ஆம் நிதியாண்டில் கார் விற்பனை மந்த நிலையைச் சந்தித்து வருகிறது. விற்பனை வேகம் குறைந்து, கார் கையிருப்பு (inventory) அதிகரித்து வருவதைச் சமாளிக்க, கார் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் வாடிக்கையாளர்களைக் கவர 5 முதல் 11 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் பழைய காரை மாற்றுவதற்கான போனஸ், இலவச பரிசுகள் போன்ற சலுகைகளையும் வழங்கப்பட்டு வருகின்றன. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான சலுகை ஆகும். நீங்க புது கார் வாங்க ஆர்வமாக இருந்தால் இப்படியொரு சான்ஸ்-ஐ மிஸ் செய்துவிடாதீர்கள்.
இந்த சலுகைகள் வெறும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பழைய மாடல்களுக்கு மட்டுமல்ல, எரிபொருள் வகை, வேரியண்ட் மற்றும் பிராண்டுகளை பொறுத்து, ஓராண்டுக்கு முன்னர் விற்பனைக்கு வந்த மாடல்களுக்கும் கூட வழங்கப்படுகின்றன என்பது தான் வியப்பு அளிக்கும் விஷயமாக உள்ளது.
இந்த சலுகைகள் ஹேச்பேக், செடான் முதல் எஸ்.யூ.வி வரையிலான அனைத்து வகையான கார்களுக்கும் பொருந்தும். பிரலமான கார் பிராண்டான ஷ்கோடா இந்தியா போன்ற சில கார் உற்பத்தியாளர்கள் கார்களின் விலையையும் குறைத்துள்ளது கூடுதல் தகவல்.
டாடா மோட்டார்ஸ், செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை நெக்ஸான் எஸ்.யூ.வி கார் மீது ரூ.1 லட்சம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது.
இதேபோல சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா எலிவேட் மிட்-சைஸ் எஸ்.யூ.வி, "சம்மர் பொனான்சா ஆஃபர்" என்ற திட்டத்தின் கீழ், கார்ப்பரேட் ஊழியர்களுக்கு ரூ.55,000 மதிப்பிலான சலுகையை வழங்கியுள்ளது.
மாருதி சுசூகி, ஏப்ரல் 2023 இல் விற்பனைக்கு வந்த பிராக்ஸ் மீது ரூ.72,000 வரையிலான சலுகைகளையும், கிராண்ட் விட்ராரா மீது ரூ.95,000 வரையிலான சலுகைகளையும் வழங்குகிறது.
கடந்த நிதியாண்டில் (FY24) பயணிகள் கார் விற்பனை 8 சதவீதம் உயர்ந்து 4.22 மில்லியன் கார்கள் விற்பனை உயர்வை எட்டி சாதனை படைத்தாலும், வெயிலின் தாக்கம், நீண்ட தேர்தல் காலம் மற்றும் அதிக விற்பனை போன்ற அடிப்படை காரணமாக தற்போது விற்பனை வேகம் குறைந்துள்ளது.
மத்திய அரசின் வாகன போர்ட்டலில் (Vahan portal) உள்ள தற்போதைய வாகன பதிவு போக்குகளை கணக்கில் கொண்டால், ஜூன் மாத விற்பனை நிலையாக இருக்கும் அல்லது எதிர்மறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications