நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் எப்போதும் இல்லாத வகையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது, பல இடங்களில் இடுப்பு அளவில் தண்ணீர் தேங்கியிருக்கும் காரணத்தால் கார், பைக், ஆட்டோ என பல தரப்பு வாகனங்கள் தண்ணீரில் மூழ்கிக்கிடக்கிறது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களை வைத்துள்ளவர்கள் பீதியிலில் உள்ளனர்.
சென்னையில் பெய்த மழையை போலவே தென் தமிழகத்தில் கடந்த 50 வருடத்தில் இல்லாத வகையில் அதி கனமழை பெய்துள்ளது. திருநெல்வேளி , குமரி மற்றும் தூத்துக்குடியில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதாகவும், சில பகுதிகளில் பெய்வது நின்றுவிட்டதாகவும் கூறுகின்றனர்.

கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கார், பைக் முதல் பல்வேறு சொத்துக்களுக்கு அதிகப்படியான சேதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை வெள்ளத்தில் மூழ்கிய அல்லது இன்ஜின் வரையில் தண்ணீர் வந்த கார், பைக் இன்சூரன்ஸ் கிளைம் செய்வது முக்கியம்.
மழை வெள்ளத்தில் ஒரு நபரின் கார் அல்லது பைக் மூழ்கியிருந்தால், இன்சூரன்ஸ் க்ளைம் செய்வது ஒரு முக்கியமான பணி. ஆனால் இது உடனே எளிதாக கிடைத்துவிடாது. அதற்கான வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
பொதுவாக அனைத்து கார்களுக்கும், பைக்குகளுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருக்கும் காரணத்தால் மழை வெள்ளத்தால் ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் பாதுகாப்பு இருக்கும். அப்படி உங்க வாகனத்திற்கும் இன்சூரன்ஸ் இருப்பின் இதை இதைப் பாலோ பன்னுங்க.
நீரில் மூழ்கிய காரை ஸ்டார்ட் செய்ய வேண்டாம்: முதலும் முக்கியமான பணி, உங்கள் நீரில் மூழ்கிய காரை பதட்டப்பட்டு ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்ய வேண்டாம். காரின் இன்ஜினில் மழைநீர் சென்று இருந்தால் நீங்கள் வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது காரின் எஞ்சினை சேதப்படுத்தும்.
அப்படி ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்து, இன்ஜின் சேதம் அடைந்தால் காப்பீட்டுக் கொள்கையின் கீழ் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியாது. மொத்த இன்ஜின் செலவுகளையும் உங்க பாக்கெட்டில் இருந்து தான் கொடுக்க வேண்டும். அத்தகைய நேரத்தில் நீங்கள் செய்யக்கூடிய ஒன்று, நீரில் மூழ்கிய காரின் புகைப்படங்களைக் கிளிக் செய்து ஆவணங்களை தயாரிப்பது தான்.
தண்ணீரில் மூழ்கியிருக்கும் காரை புகைப்படம், காரில் சேதமடைந்த பகுதியை புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். புகைப்படம் எடுப்பது கட்டாயமில்லை என்றாலும், இந்த நேரத்தில் ஆதாரங்களைச் சேகரிப்பு பலனளிக்கும், ஏனெனில் அவை பின்னர் ஆதாரமாகக் காட்ட உதவும்.
காப்பீட்டாளரை தொடர்புகொள்ளவும்: பொதுவாக மழை வெள்ளம் இருந்தால் கார், பைக் அதிகப்படியான சேதத்தை எதிர்கொள்ளும். இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு நிறையக் கிளைம் ரெக்வஸ்ட் வரும், எனவே, உங்கள் காப்பீட்டாளருக்கு விரைவாகத் தகவல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட வாகனத்தைச் சேவை மையத்திற்கு அனுப்புவது சிறந்தது.
காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவிக்க, நீங்கள் அவர்களுக்கு ஈமெயில் அனுப்பலாம் அல்லது வாடிக்கையாளர் சேவை எண்களை அழைக்கலாம் அல்லது காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று கார் இன்சூரன்ஸ் க்ளைம் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிக்கலாம் அல்லது மொபைல் வாயிலாகவும் கார் இன்சூரன்ஸ் க்ளைம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
ஈமெயில் கார் இன்சூரன்ஸ் க்ளைம் அனுப்பும் போது புகைப்படங்களை இணைக்கலாம், நீங்கள் காப்பிட்டு நிறுவனத்திற்குத் தெரிவித்த பிறகு, க்ளைம் டிக்கெட் எண்ணை மறக்காமல் பெறவும்.
காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவிப்பதில் தாமதம், காரை சர்வீஸ் சென்டருக்கு அனுப்பும் செயல்முறையைத் தாமதம் ஆகியவை தண்ணீரில் மிதக்கும் உங்கள் காருக்கு பாதிக்கும் அதிகரிக்கும். இதன் விளைவாகக் கார் அல்லது பைக் நீண்ட காலச் சேதம் ஏற்படுகிறது.
பாலிசி ஆவணங்கள் : வெள்ளத்தில் உங்கள் ஆவணங்களை இழந்தாலோ அல்லது இன்சூரன்ஸ் ஆவணங்களைத் தொலைத்துவிட்டாலோ கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் மின்னஞ்சலில் பாலிசியின் ஆவணம் கட்டாயம் இருக்கும்.
ஈமெயிலில் இல்லை என்றாலும் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, உங்கள் பாலிசி விவரங்களைப் பெறுவதற்கு உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் பிற தேவையான தகவல்களைக் கொடுத்து விவரங்களை பெறலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications