இந்தியாவில் பொதுவாகவே இரு சக்கரங்களின் விற்பனை சற்று அதிகமாகவே இருக்கும், தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஆனால் எப்போதும் இல்லாத வகையில் ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத விற்பனையை பதிவு செய்துள்ளது, இதே மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை மந்தமாக இருப்பது இந்தியாவில் புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எஸ்யூவி வாகனங்களுக்கான டிரெண்ட் மிகப்பெரியதாக உள்ளது, இதனால் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எஸ்யூவி ரேஸ்-க்குள் குதித்த நிலையில் போதுமான் எஸ்யூவி கார் சப்ளை சந்தையில் இருந்தது.

இதனால் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் பயணிகள் வாகன பிரிவு அதிகப்படியான விற்பனையை மாதாந்திர அளவில் பதிவு செய்துள்ளது. மறுமுனையில் மக்களிடம் குறைந்த அளவிலான disposable income அதாவது செலவிடப்படும் தொகை இருந்த காரணத்தால் சிறிய கார்கள் மற்றும் பைக் விற்பனை மந்தமாகியுள்ளது.
இந்தியா ஆட்டோமொபைல் உற்பத்தி அமைப்பான SIAM வெளியிட்ட தரவுகள் படி ஆகஸ்ட் மாதம் 359,228 பயணிகள் வாகனம் விற்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு இதை ஆகஸ்ட் மாதம் பதிவான 328,376 வாகனங்களை காட்டிலும் 9.4 சதவீதம் அதிகமாகும்.

இதுக்குறித்து SIAM அமைப்பின் தலைவர் வினோத் அகர்வால் கூறுகையில் ஆகஸ்ட் மாதம் பயணிகள் வாகனம், 3 சக்கர வாகன பிரிவில் சிறப்பான வளர்ச்சி பதிவாகியுள்ளது. ஆனால் இரு சக்கர வாகன பிரிவில் முந்தை ஆண்டின் அளவே உள்ளது. இதைவிட முக்கியமாக ஆகஸ்ட் 2023ல் வர்த்தக வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
2ஆம், 3ஆம் தரக நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் செலவிடப்படும் தொகை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் சிறிய ரக கார்களின் விற்பனை பெரிய அளவில் பாதித்துள்ளது. 3 சக்கர வாகனங்கள் விற்பனை 69 சதவீதம் அதிகரித்து 64,763 ஆக உள்ளது. இரு சக்கர வாகன விற்பனை அதே 1,566,694 ஆக உள்ளது, இது கடந்த வருட ஆகஸ்ட் மாத நிலவரத்துக்கு ஒத்துப்போகிறது.


Click it and Unblock the Notifications