இந்தியாவில் ஒரு நல்ல பைக் வாங்க வேண்டுமென்றால் குறைந்தது 1.5 லட்சம் ரூபாய் தேவை, குறிப்பாக இளம் தலைமுறையினரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு பைக் வாங்க வேண்டுமெனில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.
பைக் வாங்க அதிகம் செலவு செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் பெரிய பைக்குகளில் மைலேஜ் காருக்கு இணையாக வருகிறது. இதனால் பைக் வாங்கும் காசை காருக்கு டவுன் பேமெண்ட் ஆகச் செலுத்தி கார் வாங்கும் போக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதன் வாயிலாக இந்தியாவில் புதிய கார் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட முக்கியமாக இந்தியாவில் தற்போது ஆடம்பரம் மற்றும் ப்ரீமியம் கார்களை வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 10- 15 லட்சத்திற்கு மேல் கார் இருந்தால் வாங்கமாட்டார்கள் என்ற நிலை மலையேறிவிட்டது. இதற்கு உதாரணம் மாருதி சுசூகி வெளியிட்ட கிசாஷி என்னும் கார். இந்தக் கிட்டதட்ட 18 லட்சம் ரூபாய்க்கும் அதிக விலையில் விற்கப்பட்ட காரணத்தால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கார்களை மட்டுமே விற்பனை செய்தது, சந்தையை விட்டு மொத்தமாக வெளியேறியது. ஆனால் இன்று நிலைமையே வேறு.
இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி ஆடம்பர கார் நிறுவனங்களில் ஒன்று ஜெர்மனி நாட்டின் AUDI. இந்தக் கார்களின் டிசைனுக்குத் தனி இலக்கணம் உள்ளது, இதனாலேயே ஆசியாவில் அதிகப்படியான வர்த்தகக்தை கொண்டு உள்ளது. இதேபோல் ஜெர்மனி பிராண்டுகள் என்றாலே பர்ஃபாமென்ஸ் -க்கு குறைவிருக்காது என்பது எழுதப்படாத விதி.
இந்த வகையில் சிறப்பான டிசைன், தரமான பர்ஃபாமென்ஸ், ஆடம்பர வசதிகள் அடங்கிய ஆடி கார்கள் இந்தியாவில் ப்ரீமியம் பிரிவுக்கு மேல் ஆடம்பர பிரிவில் விற்கிறது. இந்தியாவில் சமீபத்தில் ஆடம்பர கார்களின் விற்பனை அதிகமாகிவிட்டது எனக் கூற AUDI காரின் விற்பனை அளவு ஒரு முக்கிய உதாரணம்.
2022ல் ஆடி நிறுவனம் 4187 கார்களை மட்டுமே விற்பனை செய்த நிலையில், 2023ல் 89 சதவீத வளர்ச்சியில் 7931 கார்களை விற்பனை செய்துள்ளது. 2023ல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் Q3 Sportback, Q8 e-tron, Q8 Sportback e-tron, A4, A6, Q5 ஆகியவை அடங்கும்.
இதேபோல் டாப் என்ட் மாடலான Q7, Q8, A8 L, S5 Sportback, RS5 Sportback, RS Q8, e-tron GT, RS e-tron GT ஆகியவற்றுக்கும் பெரிய டிமாண்ட் உள்ளது. இதனால் 2024 ஆம் ஆண்டின் விற்பனையும் சிறப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. இப்போ மாருதி சுசூகி, ஹூண்டாய் நிலைமை என்ன..?

மாருதி சுசூகி 2023 ஆம் ஆண்டில் வரலாற்றில் முதல் முறையாக இந்நிறுவனம் 20.66 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு 15 லட்சம் கார்களை விற்பனை செய்த நிலையில் கூடுதலாக 40 சதவீத கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ஒரு வருடத்தில் 2 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்ட பெருமையைப் பெற்றுள்ளது.
இதேபோல் ஹூண்டாய் முதல் முறையாக இந்திய மண்ணில் 6 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. 2022ஐ ஒப்பிடுகையில் 2023ல் 9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எப்படிப் பார்த்தாலும் வளர்ச்சியில் ஆடம்பர கார் பிராண்டான Audi தான் டாப்பு.
2023ல் நீங்க புதுக்கார் வாங்குநீங்களா..? வாங்கியிருந்தால் எந்த கார், எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications