சென்னை: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கார்களின் விற்பனை சரிவடைந்து இருப்பதாக டீலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கார்கள் விற்பனை செப்டம்பர் மாதத்தில் சுமார் 20% சரிவடைந்துள்ளதாக வாகன டீலர் சங்க கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாகன விற்பனை சரிவடைந்ததால் சுமார் 79,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 7 .90 லட்சம் கார்கள் டீலர்களிடமே தேங்கியுள்ளதாக வாகன டீலர் சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதுவரை இல்லாத அளவாக டீலர்களிடம் கார்களின் இருப்பு அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கிட்டதட்ட 80 முதல் 85 நாட்களுக்கு நிகரான விற்பனையாகாத வாகனங்கள் தேங்கி விட்டதாக வாகன டீலர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் கார்களின் விற்பனை கடந்த ஆண்டு விட 18.81 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதே போல இருசக்கர வாகனங்களின் விற்பனை 8.5 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 0.66 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனங்கள் டீலர்களுக்கு 3.5 முதல் 3.60 லட்சம் வரையிலான கார்களை தயாரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதன்படி ஹோல் சேல் மற்றும் சில்லறை விற்பனைக்கு இடையிலான வித்தியாசம் 80 ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளது மக்கள் செலவிடக்கூடிய காலம் இது. அப்படி இருந்தும் வாகன விற்பனை மந்தமாகவே இருக்கிறது என வாகன டீலர் சங்க கூட்டமைப்பின் தலைவர் விக்னேஷ்வர் தெரிவித்துள்ளார். அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் வாகன விற்பனை மந்தமாகவே இருக்கும் என்பதையே இது காட்டுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
அக்டோபர் மாதத்தில் தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால் சில்லறை விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என டீலர்ஷிப் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. பண்டிகை காலத்தை ஒட்டி பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளதும் விற்பனையை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தில் மாருதி சுசுகி, ஹூண்டாய் மோட்டார்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் எப்பொழுதும் டீலர்களுக்கு அனுப்புவதை விட 10 சதவீதம் குறைவாகவே வாகனங்களை அனுப்பி வைத்துள்ளன. இருந்தாலும் அவற்றின் விற்பனை நடக்கவில்லை என்பது தான் பிரச்சனை என்கின்றனர் டீலர்கள்.
கார்கள் விற்பனை அடையாமல் தேக்கமடைந்திருப்பது நிதி பற்றாக்குறை சூழலை உருவாக்கி இருப்பதாக வாகன டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. எனவே அதற்கேற்ற வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஹோல் சேல் விற்பனையை அடுத்து வரும் மாதங்களில் குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications