ஐரோப்பிய யூனியன் விதிக்கப்பட உள்ள கார்பன் டாக்ஸ் எனப்படும், கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசம் (CBAM) அமல்படுத்துவதை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் (WTO) சவால்விட இந்தியா, உலகின் பிற நாடுகளின் உதவியை நாட திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் இந்த கார்பன் வரியை எதிர்க்க தற்போது இந்தியா உடன் தென்னாப்பிரிக்கா இணைந்திருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய கார்பன் வரி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளது.

கார்பன் வரி குறித்து தைவான் ஏற்கனவே இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டு வெளியிட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் உலக வர்த்தக அமைப்பில் நடக்க இருக்கும் அமைச்சர்கள் மாநாட்டிற்கு முன்னதாக கார்பன் வரி எதிர்ப்புக்கு ஆதரவைப் பெற இந்தியா தற்போது பிரேசில், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை அணுக திட்டமிட்டு உள்ளது.
கார்பன் பார்டர் அட்ஜெஸ்ட்மென்ட் டாக்ஸ் என்பது ஒரு பொருளின் உற்பத்தி செய்வதன் வாயிலாக ஏற்படும் கார்பன் எமிஷன் அளவை அல்லது Fossile fuel பயன்படுத்தும் அளவீட்டை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பொருட்களின் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
கார்பன் எமிஷன் அளவின் மீது வரி விதிக்கப்படும் வேளையில் அதை குறைக்கும் வழிகளை எதிர்நோக்கும் பாதையில் உலக நாடுகள் செல்ல முடியும் என்பதே இந்த வரி விதிப்பின் அடிப்படை நோக்கமாக உள்ளது. ஆனால் இந்த வரி, வர்த்தக அளவில் பெரிய பாதிப்பை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் எதிரொலிக்கும். இதுமட்டும் அல்லாமல் உலக நாடுகள் மத்தியிலான வர்த்தக நட்புறவை பாதிக்கும் என்பதால் இதற்கான முடிவை எட்டப்படாமல் இருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கார்பன் எமிஷன் என்பது பெரும் ஆபத்தாகப் பார்க்கப்படும் நிலையில், இதைத் தடுக்கவும், ஐரோப்பிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மூலம் பூமியில் கார்பன் எமிஷன் உருலவாக கூடாது என்பதற்காக ஐரோப்பா இப்புதிய வரியை விதிக்க சில வருடங்களுக்கு முன்பு திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
அந்த வகையில் கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசம் (CBAM) அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வரும் வேளையில், முன் சோதனை கட்டமாக ஐரோப்பா அல்லாத ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய நேரடி மற்றும் மறைமுக கார்பன் எமிஷன் அளவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
தற்போதைய கணக்கின் படி ஸ்டீல் உற்பத்திக்கு கார்பன் டாக்ஸ் விதிக்கப்படுமாயின் ஜனவரி 1, 2026 முதல் 20 முதல் 35 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications