இந்தியாவில் நிறுவனங்களுக்கு சென்று பணிபுரிபவர்களில் பலர் வித்தியாசமான வணிகத்தை செய்ய வேண்டும் அதற்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அப்படி ஒரு பிசினஸ் ஐடியா குறித்துதான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். தற்போது FMCG நிறுவனங்கள் முதல் இ-காமர்ஸ் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் கார்ட்போர்ட் பாக்ஸஸ் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் கார்ட்போர்ட் பாக்ஸ் தயாரித்து விற்பனை செய்யலாம்.
சமீப காலமாக இந்தியாவில் இ-காமர்ஸ் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்கின்றனர். எனவே பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் செய்வதற்கு அழுத்தமான கார்ட்போர்ட் பாக்ஸ்கள் தேவைப்படுகின்றன. அதற்கேற்ப நீங்கள் கார்ட்போர்ட் பாக்ஸ் உற்பத்தியை தொடங்கி அதன் மூலம் வருமானம் பெறலாம்.

தேவைப்படும் முதலீடு: கார்ட்போர்ட் பாக்ஸ் தயாரிக்கும் தொழிலைத் தொடங்க உங்களுக்கு ஆரம்ப முதலீடு தேவைப்படும். அதற்கு ஒரு மெஷின் தேவை. இந்த மெஷினை வாங்குவதற்கு ரூ. 20 முதல் ரூ. 25 லட்சம் வரை செலவாகலாம். மாற்றாக ரூ. 50 லட்சம் மதிப்பிலான மெஷின்களும் உள்ளன. எனவே நீங்கள் தயாரிக்க இருக்கும் அட்டைப் பெட்டிகளை பொறுத்து உங்களுக்கு இடமும், மெஷினும் தேவைப்படும். இதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்து வாங்கிக் கொள்ளலாம்.
நிதி விருப்பங்கள்: உங்களுடைய வணிகத்திற்கு நிதியளிப்பதற்காக வங்கியில் கடன் பெறலாம். மேலும் சலுகைகளுடன் கடன் பெறுவதற்கு உங்கள் வணிகத் திட்டம் குறித்து வங்கியுடன் பேச்சு வார்த்தை நடத்தவும்.
மூலப்பொருட்கள்: உற்பத்தி செய்வதற்கு மூலப்பொருள் தேவைப்படும். காகிதம் இதற்கு ஒரு அத்தியாவசிய பொருள். நல்ல தரத்தில் அட்டைப் பெட்டிகளை தயாரிக்க நினைத்தால் அதற்கு மூலப்பொருள் வாங்குவதற்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 40 முதல் ரூ. 50 வரை செலவாகலாம்.
உற்பத்தி செயல்முறை: உற்பத்தி செயல்முறைக்கு மெஷினை பயன்படுத்த வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கும் வடிவத்தில் அட்டைப் பெட்டியை வடிவமைத்து உங்கள் பெட்டிகளின் தரம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறதா? என்பதைச் சரி பார்க்க வேண்டும்.
சந்தைப்படுத்தல்: அட்டைப் பெட்டிகளை தயாரித்து உங்களுடைய உள்ளூர் சந்தை மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆகிய இரண்டிற்கும் சப்ளை செய்யலாம். இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு தங்கள் பொருட்களை டெலிவரி செய்ய தொடர்ந்து அட்டைப் பெட்டிகள் தேவைப்படும். எனவே இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டால், உங்கள் நிறுவன வணிகத்திற்கு குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.
லாப விகிதங்கள்: உங்கள் பிசினஸ் சரியாகச் செயல்படுத்தப்பட்டால்.. ஆண்டு வருமானமாக ரூ5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை எதிர்ப்பார்க்கலாம். ஆனால் இது தோராயமான விகிதம் மட்டுமே. நீங்கள் செய்யும் வணிகத்துக்கு ஏற்பவும், உங்களுடைய மார்க்கெட்டிங் யுக்திகளுக்கு ஏற்பவும் லாப விகிதங்கள் மாறுபடலாம்.
Disclaimer: இந்த கட்டுரை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. இதை வைத்து எந்த ஒரு முதலீட்டு முடிவுகளும் எடுக்க வேண்டாம். பிசினஸ் தொடங்க நினைத்தால் இந்த ஐடியாவையும் கருத்தில் கொள்ளலாம் என்பதற்காக தான் இந்த பதிவு. எனவே எந்த ஒரு முதலீட்டையும் தொடங்குவதற்கு முன்பு சந்தையை ஆராய்ச்சி செய்து, உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications