பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து வருகிறது.. ஆனால் அரசின் நிதி வலுவிழந்துள்ளது.. கேர் ரேட்டிங்ஸ்..!

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக, சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதே வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் வளர்ச்சி பற்றிய கருத்தினை சொல்லவே வேண்டியதில்லை. ஏனெனில் முதல் காலாண்டிலேயே 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது.

இன்று பிசினஸ் டுடேவில் வெளியான அறிக்கை ஒன்றில், இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக வளர ஆரம்பித்துள்ளது. ஆனால் அரசின் நிதி நிலை தான் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது மாதத்திற்கு மாதம் சற்று வளர்ச்சி கண்டிருந்தாலும், மையத்தின் நிதியினை அதிக அளவில் பாதித்துள்ளதாக கேர் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

நிதி பற்றாக்குறை அதிகரிப்பு

நிதி பற்றாக்குறை அதிகரிப்பு

கேர் ரேட்டிங்ஸின் கணிப்பு படி, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை, 114.8 சதவீதமாக அதிகரித்து, 9.14 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால் அரசு இந்த கால கட்டத்தில் 9.14 லட்சம் கோடி ரூபாயாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மொத்த ரசீதுகள் 32.5% ( வரி மற்றும் முதலீடுகள்) குறைந்துள்ளது.

மோசமான நிதி நிலை

மோசமான நிதி நிலை

பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி படிப்படியாக மீண்டு வந்தாலும், மத்திய அரசின் நிதி மீண்டும் மோசமான நிலையிலேயே உள்ளது. ஏனெனில் கொரோனாவின் காரணமாக அரசின் செலவினங்களும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நிதி பற்றாக்குறை இன்னும் அதிகரிக்கவே வழி வகுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% ஆக இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.

பட்ஜெட் மதிப்பீட்டில் வரி வருவாய்

பட்ஜெட் மதிப்பீட்டில் வரி வருவாய்

அரசின் மொத்த ரசீதுகள் நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் 32.5% குறைந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதே செலவினங்கள் 0.6% குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் அரசின் வரி வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டில் 28% மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இவை கிட்டதட்ட 25% குறைவாக இருந்தன. கலால் வரிகளைத் தவிர அனைத்து வரிகளும் குறைந்து விட்டன என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.

வருமான வரி வசூல்

வருமான வரி வசூல்

மையத்தின் வருவாயைப் பொறுத்த வரையில், வருமான வரி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கிட்டதட்ட 22% குறைவாக உள்ளது. கார்ப்பரேஷன் வரி கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கிட்டதட்ட 40% குறைந்துள்ளது. இதே கஸ்டம்ஸ் வரி முதல் காலாண்டில் 44% குறைந்துள்ளது. எனினும் எரிபொருள்களுக்கான வரியை உயர்த்தியதால் கலால் வரியிலிருந்து வருவாய் 34% அதிகரித்துள்ளது. வரி அல்லாத வருவாய் 56% வீழ்ச்சி கண்டுள்ளது. மொத்தத்தில் கொரோனா காரணமாக அனைத்து துறைகளில் இருந்தும் வருவாய் குறைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+