சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கார்ஸ் 24 நிறுவனம் தங்களுடைய ஊழியர்கள் 200 பேரை திடீரென பணியில் இருந்து நீக்கியது.
சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன என பார்த்தால் இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் கூட ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளன. அதன்படி சென்னையை தலைமையிடமாக கொண்டு பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யக்கூடிய கார்ஸ்24 நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 200 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

இது தொடர்பாக கார்ஸ் 24 நிறுவனத்தின் துணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான விக்ரம் சோப்ரா மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 200 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் இதன் பிறகு பணி நீக்க நடவடிக்கை எதுவும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். கார்ஸ் 24 நிறுவனத்தில் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தங்களுடைய நிறுவனம் எடுத்துக்கொண்டு சில ப்ராஜெக்டுகளை தற்போதைக்கு கைவிட்டு இருப்பதால் இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விக்ரம் சோப்ரா ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருக்கிறார். இதன்பிறகு நம்முடைய நிறுவனத்தில் எந்த ஒரு பணி நீக்க நடவடிக்கையும் இருக்காது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் புதிதாக தற்போதைக்கு யாரையும் வேலைக்கு எடுக்கும் எண்ணம் நிறுவனத்திற்கு இல்லை என குறிப்பிட்டு இருக்கும் அவர் இனிவரும் காலங்களில் தங்களுடைய நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது மிக கடினமான நடைமுறைகள் பின்பற்றப்படும் என குறிப்பிட்டு இருக்கிறார். அனைத்து விண்ணப்பங்களும் மிக கவனமாக கையாளப்பட்டு தான் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் கார்ஸ் 24 நிறுவனம் கார்களை ரிப்பேர் செய்வதற்கான ஒரு செயலியை அறிமுகம் செய்தது. 2024 மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடைந்த நிதியாண்டில் கார்ஸ் 24 நிறுவனத்தின் வருமானம் 25 சதவீதம் உயர்ந்து 6,917 கோடி ரூபாயாக இருந்தது.
குறிப்பிட்ட சில பிராஜெக்ட்டுகள் வரும் என்பதற்காக முன்கூட்டியே தங்கள் நிறுவனம் கூடுதலாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ததாகவும் ஆனால் தற்போது அந்த பிராஜெக்டுகளும் வரவில்லை ஏற்கனவே எடுத்த பிராஜெக்டுகளும் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை என்பதாலேயே இந்த கடினமான முடிவை எடுத்திருப்பதாகவும் விக்ரம் சோப்ரா கூறியிருக்கிறார். முன்னதாக கார்ஸ் 24 நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஆட்டோமேட்டிவ் அமைப்பான Team-BHP-ஐ கையகப்படுத்தியது.
More From GoodReturns

எங்க முதலாளி.. தங்க முதலாளி..!! ஊழியர்களுக்கு ஆடி கார்களை பரிசாக தந்த சென்னை முதலாளி..!!

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications