ஆன்லைன் வாகன தளமான கார்டிரேடு டெக் நிறுவனம் ஆன்லைனில் புதிய, பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை தொடர்பான சேவையை வழங்கி வருகிறது. கார்டிரேடு,கார்வேல் மற்றும் ஆட்டோபிஸ் போன்ற பல பிராண்டுகளை இந்நிறுவனம் சொந்தமாக கொண்டு செயல்படுகிறது.
இந்த தளங்கள் வாயிலாக புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகன வாடிக்கையாளர்கள், வாகன டீலர்ஷிப்கள், ஓஎம்இக்கள் மற்றும் பிற வணிகங்கள் தங்களது வாகனங்களை எளிமையாகவும் திறமையாகவும் வாங்கவும் விற்கவும் கார்டிரேடு டெக் நிறுவனம் உதவுகிறது.

இந்நிறுவனம் 2021 ஆகஸ்டில் பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்டது. அது முதல் 18 மாதங்கள் இந்நிறுவன கடுமையான சவால்களை எதிர்கொண்டது, பங்கின் விலை புதிய சரிவை சந்தித்தது. இருப்பினும், நிறுவனத்தின் வலுவான நிதிநிலை முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொடுத்தது, இதன் எதிரொலியாக 2023 ஏப்ரல் முதல் இந்நிறுவன பங்கின் விலை உயர்வு காண தொடங்கியது.
கார்டிரேடு டெக் நிறுவனம் தொடர்ந்து வலுவான நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகிறது. உதாரணமாக இந்நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.186.68 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.42.19 கோடி சம்பாதித்துள்ளது.
2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.67.99 கோடி ஈட்டியுள்ளது. அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.24.39 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய 2023 செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தைகள் பலத்த சரிவை சந்தித்து வருகின்ற போதிலும், கார்டிரேடு டெக் நிறுவன பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 2024 அக்டோபர் முதல் இதுவரை கார்டிரேடு டெக் நிறுவன பங்கின் விலை 90 சதவீதம் உயர்ந்துள்ளது.
2024 மார்ச் முதல் இதுவரை இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 150 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. 2023 மார்ச் முதல் இதுவரையிலான 23 மாதங்களில் இப்பங்கு 305 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. 2023 மார்ச் மாதத்தில் இப்பங்கின் விலை ரூ.390ஆக இருந்தது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.1,600ஐ தாண்டியது.
தரகு நிறுவனமான ஜேஎம் பைனான்சியல், கார்டிரேடு டெக் பங்குகள் குறித்து வாங்கலாம் என்ற தனது மதிப்பீட்டை மாற்றமின்றி வைத்துள்ளது மேலும் பங்கின் இலக்கு விலையை ரூ.1,820ஆக மதிப்பிட்டுள்ளது. கார்டிரேடு டெக் நிறுவனம் பிரபல ஆன்லைன் சேவை தளமான ஓஎல்எக்ஸை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Story written by: Subramanian
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications