கார்ப்ரேட் நிறுவனங்களைக் கதறவிட்ட Hindenburg, கடைசியாக அடித்து துவைத்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கார்வானா என்னும் கார் டீலர்ஷிப் நிறுவனம் தான். இதை அமெரிக்க மக்கள் மத்தியில் அமேசான் ஆஃப் கார் சேல்ஸ் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் ஹிண்டன்பெர்க் இதை அடித்து துவைத்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கார்வானா சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு ஆன்லைன் கார் விற்பனை நிறுவனம் ஆகும். இதன் முக்கிய வியாபாரம் என்றால், ரீடைல் வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்திய கார்களை வாங்கவும் விற்கவும் அனுமதிக்கும் ஒரு ஆன்லைன் தளமாகும். ஒரு ஈகாமர்ஸ் தளம் போன்றது.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் திவால் நிலையை எதிர்கொண்ட போதிலும், கார்வானாவின் பங்கு 2024 ஆம் ஆண்டில் 284% உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் மோசமான நாட்கள் முடிந்துவிட்டதாக நம்பினர். ஆனால் உண்மையை ஹூண்டன்பெர்க் உடைத்தது.
ஹூண்டன்பெர்க் நிறுவனத்தின் 4 மாத கால ஆராய்ச்சியின் முடிவில், ஜனவரி 2ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் கார்வானாவின் புரட்சி ஒரு மாயை என்று கூறியது, ஜனவரி 3ஆம் தேதி மட்டும் கார்வானா பங்கு மதிப்பு 200 டாலரில் இருந்து 177 டாலர் வரையில் குறைந்தது.
இந்த ஆராய்ச்சியில், தொழில்துறை வல்லுநர்கள், முன்னாள் கார்வானா ஊழியர்கள், போட்டியாளர்கள் மற்றும் நிறுவனத்துடன் தொடர்புடைய தரப்பினர் உள்ளிட்ட 49 பேருடன் நேரடியாகப் பேட்டி கண்டுள்ளது ஹூண்டன்பெர்க் நிறுவனம். இந்த அறிக்கையின் விளைவாக, கார்வானாவின் பங்கு விலை 15% வரை வீழ்ச்சியடைந்தது.
இந்த ஆராய்ச்சியில், கார்வானா நிறுவனம் சுமார் 800 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கடன்களை மறைந்துள்ளது என்றும், கணக்கியல் தவறுகள் மற்றும் தளர்வான வட்டியில் கடன் வழங்கல் முறைகள் தற்காலிகமாக வருவாயை அதிகரிக்க வழிவகுத்ததாகவும், அதே நேரத்தில் நிர்வாகிகள் பில்லியன் கணக்கில் பங்குகளை விற்று லாபம் ஈட்டியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் முறைகேடாகக் கணக்குக் காட்டியது மூலம் சக போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் 845 சதவீதம் அதிகம் விற்பனை செய்துள்ளதாகவும், 745 சதவீதம் அதிக வருமானம் ஈட்டியுள்ளதாகவும் கணக்குக் காட்டி பங்கு விலையை உயர்த்தியுள்ளது. இந்த பங்கு உயர்வை பயன்படுத்தி கார்வானா சிஇஓ Ernie Garcia III-வின் தந்தை Ernest Garcia II 4 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து பெரிய லாபம் பார்த்துள்ளார்.
ஆனால் இந்த 15 சதவீத சரிவை அடுத்த சில நாட்களில் மீண்டு வந்துள்ளது கார்வானா, ஹிண்டன்பெர்க் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்த பின்பு நேற்றைய வர்த்தகத்தில் 9.66 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications