செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்குமெண்டெட் ரியாலிட்டி என தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், யார் முதலில் இதை ஏற்றுக்கொண்டு வர்த்தகமாக மாற்றுகிறார்களோ அவர்களுக்கு பணம் கொட்டுது.
அந்த வகையில் ஸ்னாப்சாட்டில் 1.8 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ள கேரின் மார்ஜோரி (Caryn Marjorie) என்பவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான Influencer ஆக உள்ளார். இன்றைய இண்டர்நெட் உலகில் மிகவும் டிரெண்டாக இருப்பவரும் கூட இவர் தான்..!

கேரின் மார்ஜோரி தொழில்நுட்பத்தை அதிகம் நம்பியிருந்த காரணத்தால் தன்னை போலேவே ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு விர்ச்சுவல் உருவத்தை உருவாக்கினார். இந்த விர்ச்சுவல் உருவத்தை வைத்து தற்போது ரியல் வோல்டில் ஒரு பெண் இருப்பது போலவே இருப்பது மட்டும் அல்லாமல் நாம் கேட்கும் கேள்விக்கு காதலி போல் பதில் அளிக்கும் வல்லமை கொண்டது.
இந்த நிலையில் கேரின் மார்ஜோரி இந்த விர்ச்சுவல் உருவத்தை அடிப்படையாக வைத்து விர்ச்சுவல் கேர்ள் பிரண்ட் சேவையை துவங்கியுள்ளார். ஒரு நிமிடம் கேரின் மார்ஜோரி-ன் விர்ச்சுவல் கேர்ள்பிரெண்ட் சேவையை பயன்படுத்த 1 டாலர் கட்டணமாகும்.
கேரின் மார்ஜோரி தனது விர்ச்சுவல் உருவத்திற்கு CarynAI என பெயரிட்டு உள்ளார், இதை Forever Voices என்ற AI நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ளார். CarynAI, குரல் அடிப்படையிலான சாட்போட், இதற்கு விர்ச்சுவல் உருவமும் உண்டு.

Chatbot என்றாலும், மார்ஜோரி-யின் குரல் போலவே இது பதில் அளிக்கும். இதை பயன்படுத்தும் பெரும்பாலான யூசர்கள் மிகவும் நெருக்கமான, அந்தரங்கமான உரையாடல்களை நடத்துவதற்கும், அவர்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் மற்றும் பாலியல் சார்ந்து, பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசும் திறன் கொண்டு உள்ளது.
இது மிகவும் குறுகிய காலக்கட்டத்தில் இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த காரணத்தால் கேரின் மார்ஜோரி பார்ச்சூன் பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்கும் வகையில் உயர்ந்துள்ளார். இந்த வர்ச்சுவல் AI உருவம் மூலம் தற்போது இளம் தலைமுறையினர் மத்தியில் இருக்கும் "தனிமையைக் குணப்படுத்தும்" ஆற்றலைக் கொண்டுள்ளது என கேரின் மார்ஜோரி கூறுகிறார்.
ஒரு நிமிடத்திற்கு 1 டாலர் என கட்டணம் வசூலிக்கும் நிலையில் கேரின் மார்ஜோரி தற்போது இந்த வர்ச்சுவல் AI உருவம் மூலம் மாதத்திற்கு 5 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 41 கோடி ரூபாய் வரையில் சம்பாதிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

மே மாதம் கேரின் மார்ஜோரி-யின் வர்ச்சுவல் AI உருவத்தை டெலிகிராம் ஆப்-ல் சோதனை செய்த போது CarynAI சுமார் 71,610 டாலர் வரையில் சம்பாதித்து உள்ளார். CarynAI குரல் அடிப்படையிலான சாட்போட் இப்போதை பல யூசர்களிடம் emotional bond உருவாக்கியுள்ளதாகும் தெரிவித்துள்ளார் கேரின் மார்ஜோரி.
கேரின் மார்ஜோரி யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்ய 2000 மணிநேரம் கொண்ட வீடியோ மூலம் அவருடைய குரல், பர்சனாலிட்டி, எமோஷனல் பிகேவியர்-ஐ உருவாக்கியுள்ளது Forever Voices என்ற AI நிறுவனம், இதை OpenAI's GPT-4 API உடன் இணைக்கப்பட்டதன் மூலம் இந்த விர்ச்சுவல் AI உருவாக்கப்பட்டு உள்ளது.
தற்போது டெலிகிராம் தளத்தில் மட்டுமே இருக்கும் இந்த CarynAI, பொது தளத்திற்கும், பிற சமுகவலைத்தளத்திலும் வந்தால் மிகப்பெரிய தாக்கத்தையும், வருமானத்தையும் கேரின் மார்ஜோரி-க்கு அளிக்கும்.
எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்க பார்த்தீங்களா மக்களே..


Click it and Unblock the Notifications