வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? இதை செஞ்சீங்கன்னா வரித்துறை கிட்ட மாட்டிப்பீங்க!

வீட்டில் தங்கம் வைத்திருப்பது, பணம் வைத்திருப்பது என அனைத்திற்கும் வருமான வரித்துறை குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது. அதை தாண்டி பணமோ அல்லது நகையோ இருந்தால் அதற்கு உங்களிடம் தகுந்த சாட்சி மற்றும் ஆதாரங்கள் இருக்க வேண்டும். இந்நிலையில் மக்களிடம் எழும் ஒரு பொதுவான கேள்வி என்னவென்றால் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம்? என்பதுதான். வீட்டில் பணம் வைத்திருப்பது தொடர்பாக வருமானவரிச் சட்டம் என்ன சொல்கிறது?, எவ்வளவு தொகையை மீறி வைத்திருந்தால் தண்டனை கிடைக்கும்? என்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

வருமானவரிச் சட்டம் என்ன சொல்கிறது?: வருமானவரி சட்டத்தில் தனி நபர்கள் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்கு நிலையான வரம்புகள் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே தனி நபர்கள் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். உயர்பதவியில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? இதை செஞ்சீங்கன்னா வரித்துறை கிட்ட மாட்டிப்பீங்க!

உயர் பதவியில் இருந்தால் அவர்களுக்கு சிறப்பு விலக்கு அளிக்கப்படும் என்றெல்லாம் கிடையாது. அனைவருக்கும் ஒரே வரம்பு தான் ஆனால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தாக வேண்டும். பணம் சட்டபூர்வ மூலத்திலிருந்து வந்திருக்க வேண்டும். அதாவது நீங்கள் வைத்திருக்கும் பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கு உங்களிடம் தகுந்த சாட்சி மற்றும் ஆதாரங்கள் இருக்க வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் பணம் தொடர்பான தகவல்களை வருமான வரி தாக்கல் செய்யும்போது தெரிவிக்க வேண்டும்.

உங்களுக்கு கிடைத்த பணம் எங்கிருந்து வந்தது? என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் தான் பிரச்சனை எழும். வருமானவரிச் சட்டத்தின் பிரிவுகள் 68 முதல் 69-பி வரையிலான பிரிவுகளின் கீழ் ஒருவர் தனது வருமானம் எங்கிருந்து வந்தது என்பதை விளக்க தவறிவிட்டால் அதிகாரிகள் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தலாம்.

தனிநபர் தன்னிடம் உள்ள பணத்திற்கு உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால் அது கணக்கில் காட்டப்படாத பணமாக வகைப்படுத்தப்பட்டுவிடும். இது கடுமையான தண்டனை மற்றும் வரிவிதிப்புக்கு வழிவகுக்கலாம்.

விதிகளை மீறினால் என்ன நடக்கும்?: விசாரணையின் போது வரி அதிகாரிகள் உங்களிடம் கணக்கில் காட்டப்படாத பணம் இருப்பதை கண்டறிந்தால், அபராதம் விதிக்கலாம். பணத்தை உங்களிடமிருந்து பறிமுதல் செய்யலாம். அந்த தனி நபருக்கு எதிராக நடவடிக்கை கூட எடுக்கலாம்.

இதற்கு முன்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் பெரிய அளவிலான பணத்தை பறிமுதல் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. இது போன்ற செய்திகள் இணையத்தில் வெளியாகும். செய்தித்தாள்களிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை எடுக்க எடுக்க பணம் வந்து கொண்டே இருந்தால் பணத்தை வைத்திருப்பவரை கைது செய்யும் வாய்ப்பும் உள்ளது.

எனவே வீட்டில் வைத்திருக்கும் பணம் எங்கிருந்து வந்தது என்பதை விளக்கும் தன்மை உங்களிடம் இருந்தால் பயப்படத் தேவையில்லை. எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். அதே சமயம் நீங்கள் வரி தாக்கல் செய்யும்போது இது குறித்த தகவல்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.

கருப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பை தடுப்பதற்காக அரசு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. எனவே முறையான நிதி பதிவுகளை பராமரிப்பது அவசியம். ஒருவேளை உங்களிடம் அதிக அளவு பணம் இருந்தால் தேவையற்ற சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்கு அதை வீட்டில் வைப்பதற்கு பதிலாக வங்கிகளில் டெபாசிட் செய்து வைப்பது சிறந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+