மதுபானம் ஒவ்வொரு மாநில அரசின் முக்கியமான வருமானம் ஈட்டும் பிரிவாக இருக்கும் வேளையில், மாநிலத்தின் நிதி பற்றாக்குறையை குறைக்கும் எளிய வழியாக இந்த மதுபானம் மீதான வரி உயர்வு உள்ளது. மதுபானம் மீதான வரியை உயர்த்துவதால் மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பும் வராது என்பதால் மாநில அரசுகள் இதை அதிகளவில் பயன்படுத்துகிறது. இதனால் தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுக்கு மதுபானம் மீதான வரி வருவாய் முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது.
இந்த நிலையில் தற்போது நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் மகாராஷ்டிரா அரசு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் (IMFL) கலால் வரியை உற்பத்தி செலவில் தற்போது இருக்கும் 3 மடங்கிலிருந்து 4.5 மடங்காக உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும், உள்ளூர் மதுபானங்களின் வரி ஒரு ப்ரூஃப் லிட்டருக்கு ரூ.180-லிருந்து ரூ.205 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சில வரி விதிப்பு உரிமையில் மதுபானமும் ஒன்று, பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியம் பொருட்களுக்கு அடுத்தப்படியாக மதுபானம் ஜிஎஸ்டி வரம்பில் இல்லாமல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது மதுபானம் மீது கலால் வரி, வாட் வரி, செஸ் ஆகியவை விதிக்கப்படுகிறது.
மகாராஷ்டிர அரசு சட்டசபையில் வரி உயர்வு குறித்த தீர்மானத்தை அறிவித்தது மூலம் புதிய விலை மாற்றம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த விலை உயர்வு மாநில அரசுக்கு வருடத்திற்கு சுமார் ரூ.14,000 கோடி கூடுதல் வருவாயை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் வரி உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருப்பது மகாராஷ்டிர அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த 'லட்கி பஹின் யோஜனா' போன்ற சிறப்பு திட்டங்களின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படுவதால், மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்கவே தற்போது மதுபானம் மீதான வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா அரசு, தானிய அடிப்படையிலான புதிய மதுபான வகையான மகாராஷ்டிரா-தயாரிப்பு மதுபானம் (MML) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உள்ளூர் மதுபான உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும், ஆனால் இதற்கு புதிய ரிஜிஸ்ட்ரேஷன் தேவைப்படும். IMFL மற்றும் country liquor-க்கு அடுத்தப்படியாக இந்த MML பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது.
இந்த முயற்சி உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் அதே வேளையில் வேலைவாய்ப்புகளையும் இத்துறையில் அதிகரிக்கும். இப்புதிய வகை மதுபானம் மற்றும் புதிய ரிஜிஸ்ட்ரேஷன் ஆகியவை மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க உதவும்.
இதேபோல் மதுபானங்களின் குறைந்தபட்ச ரீடைல் விலைகளும் திருத்தப்பட்டுள்ளன. 180 மில்லி பாட்டில்களுக்கு, உள்ளூர் மதுபானம் (country liquor) ரூ.70-லிருந்து ரூ.80 ஆகவும், மகாராஷ்டிரா-தயாரிப்பு மதுபானம் ரூ.148 ஆகவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் ரூ.205 ஆகவும் உயர்ந்துள்ளது.
பிரீமியம் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.210-லிருந்து ரூ.360 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதால் எவ்விதமான எதிர்ப்பும் இதற்கு இருக்காது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications