இந்தியாவில் தற்போது குயிக் காமர்ஸ் செயலிகளின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. செப்டோ, இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் உள்ளிட்ட செயலிகள் வாயிலாக நாம் மளிகை பொருட்கள் முதற்கொண்டு அனைத்தையும் ஆர்டர் செய்து 10 நிமிடங்களுக்குள் டெலிவரி பெற்றுக் கொள்கிறோம்.
தொடக்கத்தில் பல்வேறு தள்ளுபடிகள் உடன் சேவை வழங்கி வந்த இந்த நிறுவனங்கள் பின்னாளில் படிப்படியாக டெலிவரி கட்டணம், பிளாட்பார்ம் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூல் செய்ய தொடங்கின. இந்நிலையில் செப்டோவில் வசூல் செய்யப்படும் ஒரு புதிய வகை கட்டணம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

செப்டோ Cash on delivery முறையில் நாம் ஆர்டர் செய்யும் போது Cash handling fee என தனியாக பணம் வசூல் செய்யப்படுவதாக ரசீதுடன் பதிவு செய்து இருக்கிறார். சுமுக் ராவ் என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தன்னுடைய நண்பர் செப்டோவில் பொருட்களை ஆர்டர் செய்வதாகவும் அதற்கு சில நாட்களாக ஆன்லைனில் பணம் செலுத்தலாம் என கிளிக் செய்தால் அது கேஷ் ஆன் டெலிவரியாகவே வருகிறது என கூறினாராம்.
பின்னர் ஆய்வு செய்ததில் தான் செப்டோ Pay online மற்றும் pay cash/UPI on delivery என்ற பட்டன்களை புத்திசாலிதனமாக மாற்றி வைத்து அதில் வாடிக்கையாளர் பணத்தை கொள்ளை அடிப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். நாம் தவறுதலாக pay cash/UPI on delivery என்பதை கிளிக் செய்துவிடுவோம் அதில் pay on deliveryக்கு Cash handling fee என்பதை தனியாக வசூல் செய்கின்றனர், ஆனால் நாம் ஆர்டர் செய்யும் போதே அது காட்டுவதில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஆன்லைனில் பணம் செலுத்தாமல் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பணம் செலுத்தும் ஆர்டருக்கு கேஷ் ஹேண்டிலிங் சார்ஜ் என 25 ரூபாய் வசூல் செய்கிறார்களாம். நாம் ஆர்டர் செய்யும் போது இதனை விரிவாக குறிப்பிடுவதில்லை என சாடியுள்ளார். இதனை புகைப்படத்தோடு பதிவிட்டுள்ள அவர் செப்டோ நிறுவனம் இப்படி மறைமுகமாக பல கட்டணங்களை வசூல் செய்கிறது என கூறுகிறார்.
அவருடைய இந்த பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இது முறைகேடானது என ஒரு பயனர் கூறியுள்ளார். நாம் பொருளை ஆர்டர் செய்யும் போது முன்கூட்டியே Cash handling fee கட்டணம் என்பது காட்டப்படுவது கிடையாது பொருளை நம்மிடம் டெலிவரி செய்துவிட்டு நாம் பணம் செலுத்திய பிறகு தான் இதனை காட்டுகின்றனர் என ஆதாரத்துடன் ஒருவர் பதிவிட்டுள்ளார் .
written by : Devika Manivannan
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications