மருத்துவ காப்பீடு: 1 மணி நேரத்தில் கேஷ்லெஸ் கிளைம்.. மத்திய அரசின் டக்கரான அறிவிப்பு..!

டெல்லி: இந்தியாவில் மருத்துவ செலவினங்கள் ஆண்டுதோறும் உயர்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் மருத்துவ காப்பீடு திட்டங்களே இந்த செலவுகளில் இருந்து நம்மை காக்கும் பாதுகாவலனாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவில் தற்போது அரசு சார்பாக மருத்துவ காப்பீடு திட்டங்கள் வழங்கப்படுகின்றன, தனியார் நிறுவனங்களும் மருத்துவ காப்பீடுகளை வழங்குகின்றன.

மருத்துவ காப்பீட்டில் நாம் இரண்டு முறைகளில் காப்பீடு தொகை பெற முடியும். ஒன்று Cashless எனப்படும் முறை இதில் காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளில் நாம் சிகிச்சை பெறும்போது நம்முடைய இன்சூரன்ஸ் கார்டினை காட்டினால் மட்டுமே போதும் எந்த ஒரு பணமும் செலுத்த வேண்டியதில்லை. இரண்டாவது நாம் பணத்தை செலுத்தி விட்டு பின்னர் காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்வது.

மருத்துவ காப்பீடு: 1 மணி நேரத்தில் கேஷ்லெஸ் கிளைம்.. மத்திய அரசின் டக்கரான அறிவிப்பு..!

சில மருத்துவமனைகளில் நாம் சிகிச்சை பெற்று விட்டு அந்த ரசீதுகளை காட்டி விண்ணப்பம் செய்து காப்பீடு தொகை பெற முடியும். இவ்வாறு காப்பீடு கிளைம்களுக்காக நாம் விண்ணப்பம் செய்தால் உடனடியாக நிறுவனங்கள் அதற்கு ஒப்புதல் தெரிவிக்காது. இதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும் . இந்த காத்திருப்பு காலத்தை குறைக்க வேண்டும் என அரசு திட்டமிட்டு இருக்கிறது.

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் என ஐஆர்டிஏஐ 2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ காப்பீடு என்ற இலக்கை நோக்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக காப்பீடு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு முறையாக காப்பீடு தொகையை வழங்குவதற்கும், க்ளைம் நடைமுறைகளை எளிமையாக்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்படி ஒரு தொழில் முறை முகமையை அமைத்து காப்பீடு க்ளைம்களுக்கான செயல்முறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்களை எளிமையாக்குவதற்கு ஐஆர்டிஏஐ முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் அனைத்து பாலிசிதாரர்களும் சீராகவும் வேகமாகவும் தங்களுடைய உரிமை கோரல்களை விண்ணப்பம் செய்து காப்பீடு தொகையை பெற முடியும். அதாவது இன்சூரன்ஸ் துறையில் பிஐஎஸ் வகையிலான ஒரு தர நிர்ணயத்தை கொண்டு வர வேண்டும் என்பதே ஐஆர்டிஏஐ யின் திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 2024 நிலவரப்படி இந்தியாவில் நிலுவையில் இருக்கும் க்ளைம்களின் எண்ணிக்கை 25 மில்லியன் . இது 2022ஆம் ஆண்டில் 8.5 மில்லியன் ஆகவும் 2023ஆம் ஆண்டில் 17.5 மில்லியன் ஆகவும் இருந்தது.

இந்தியாவில் மருத்துவ காப்பீடு பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் காப்பீடு கவரேஜ் என்பது அனைத்து சிகிச்சைகளுக்கும் வழங்கப்படுவது கிடையாது. இந்த சூழலில் தான் காப்பீடு துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக காப்பீட்டு நிறுவனங்கள் கேஷ்லெஸ் க்ளைம் கோரிக்கைகளை ஒரு மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் இது சம்பந்தப்பட்ட இறுதி கிளைம் செட்டில்மெண்டை 3 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+