ஹெல்த் இன்சூரன்ஸ்-க்கு 3 மணிநேரத்தில் ஒப்புதல்.. மருத்துவமனை, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் செக்..!!

சென்னை: ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பதே அவசரக் காலத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக தான், ஆனால் இப்போதெல்லாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி பெற்றும், டிஸ்சார்ஜ் ஆகும் போதும் பெரும் தலைவலியாக இருப்பது இன்சூரன்ஸ் கிளைம்.

சிகிச்சை முடிந்து வீட்டு செல்ல நோயாளி காத்திருக்கும் வேளையில், மருத்துவர் மதிய நேரத்தில் ரவுன்ட்ஸ்-க்கு வந்து டிஸ்சார்ஜ் செய்ய ஒப்புதல் கொடுப்பார். இதைத் தொடர்ந்து மருத்துவமனை தங்களுடைய முழு பில்லிங்கை முடித்து மாலை 3-4 மணிக்கு கண்சாலிடேட் பில்-ஐ கொடுப்பார்கள்.

ஹெல்த் இன்சூரன்ஸ்-க்கு 3 மணிநேரத்தில் ஒப்புதல்.. மருத்துவமனை, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் செக்..!!

இதை கொண்டுபோய் மருத்துவமனையில் இன்சூரன்ஸ் கிளைம் செக்ஷனில் கொடுத்தால் இரவு 10-11 ஆகிறது ஒப்புதல் பெற. இதற்கிடையில் மருத்துவமனை ஒரு நாளுக்கான ரூம் பில் கேட்கிறது. இது பெரும் தலைவலியாக இன்றைய மருத்துவமனையில் நடக்கிறது. இதற்குத் தீர்வு கண்டுள்ளது IRDAI அமைப்பு.

நோயாளிகளுக்கு மிகுந்த அவசியமான சிகிச்சை காலத்தில், காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது மூன்றாம் தரப்பு நிர்வாகிகள் (TPAs) ஆகியோர் ஹெல்த் இன்சூரன்ஸ் தொகையைச் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்கள், நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்குகிறது.

Local Circles நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, "பல சந்தர்ப்பங்களில், நோயாளி டிஸ்சார்ஜ் செய்யத் தயாராக இருந்தும், காப்பீட்டுத் தொகைக்கான ஒப்புதல் கிடைக்காமல், 10-12 மணி நேரங்கள் வரை அவர்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருந்தது.

இந்த தாமதம் மூலம் ஏற்படும் கூடுதல் நேரத்திற்கு ஒரு இரவுக்கு தங்கும் செலவை நோயாளிகளே ஏற்க வேண்டியிருக்கும். இதை விட கொடுமையான விஷயம் என்னவென்றால் சில நோயாளிகளின் கூற்றுப்படி, காப்பீட்டு நிறுவனம் நோயாளி அனுமதிக்கப்படுவதற்கு முன்பே, மருத்துவமனையின் TPA டெஸ்க்கிற்கு pre-approval அளித்திருந்தும் கூட இத்தகைய தாமதங்கள் ஏற்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற, IRDAI இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் உருவாக்கியுள்ள புதிய விதி அமலாக்கம் செய்யப்பட உள்ளது. இது ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துள்ளவர்களுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது.

காப்பீட்டுத் தொகை ஒப்புதலுக்கான காலக்கெடு: காப்பீட்டுத் தொகை செலுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க, IRDAI புதிய விதி ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி, மருத்துவமனை நோயாளியின் டிஸ்சார்ஜ் கோரிக்கையைக் காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பித்த பிறகு, இறுதி ஒப்புதலைக் காப்பீட்டு நிறுவனம் மூன்று மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும்.

மே 29 தேதி IRDAI வெளியிட்ட அறிக்கையில், "எந்த சூழ்நிலையிலும், காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் நோயாளி மருத்துவமனையில் தங்க வைக்கப்படக் கூடாது" என்று ஐஆர்டிஏஐ கண்டிப்பான முறையில் தெரிவித்துள்ளது.

மேலும், "மூன்று மணி நேரக் காலக்கெடுவை மீறி தாமதம் ஏற்பட்டால், மருத்துவமனை வசூலிக்கும் கூடுதல் தொகையை, காப்பீட்டு நிறுவனம் தனது பங்குதாரர்களின் நிதியிலிருந்து செலுத்த வேண்டும்" என்றும் ஐஆர்டிஏஐ கூறியுள்ளது.

நோயாளி உயிரிழப்பு ஏற்பட்டால் உடனடி பரிசீலனை!: ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்த நோயாளி மருத்துவ சிகிச்சை அளிக்கும் போதே இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் மீதான பொருளாதார சுமையைக் குறைப்பதற்காக, விரைவான இறப்பு கிளைம் செட்டில்மெண்ட் (claim settlement) நடைமுறைகளைச் செய்ய ஐஆர்டிஏஐ வலியுறுத்தியுள்ளது. இதில் முக்கியமாகக் காப்பீட்டு நிறுவனம் 2 பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.

உடனடி க்ளைம் பரிசீலனை: காப்பீட்டாளர் உயிரிழந்த அடைந்தவுடன், அவரது காப்பீட்டுத் தொகைக்கான கோரிக்கையைக் காப்பீட்டு நிறுவனம் உடனடியாக பரிசீலித்து செட்டில் செய்ய வேண்டும். இதன்மூலம் காப்பீட்டாளரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுவதைக் குறைக்க முடியும்.

உடலை மீட்பதற்கான உதவி: மருத்துவமனையிலிருந்து உயிரிழந்த காப்பீட்டாளரின் உடலை உடனடியாக வெளியேற்றுவதற்கான செலவுகளையும் காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும் என்று ஐஆர்டிஏஐ கூறியுள்ளது. இது நோயாளி இறந்த துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

100% காஷ்லெஸ் சேவை: 100% காஷ்லெஸ் கிளைம் செட்டில்மெண்ட் (cashless claim settlement) எனில் காப்பீட்டுத் தொகைக்கான ஒப்புதலை ஒரு மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதைச் செய்வதற்காக ஜூலை 31, 2024க்குள் தேவையான நடைமுறைகளைக் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும் என்று ஐஆர்டிஏ கட்டளையிட்டுள்ளது. மருத்துவமனைகளில் காஷ்லெஸ் சிகிச்சைக்கான தனி உதவி மையங்களை (help desks) ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஐஆர்டிஏஐ வலியுறுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+