மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..!

இந்தியாவில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய மிகவும் விரும்பத்தக்க இடமாக மாறி வருகிறது கேமேன் தீவுகள். மொரீஷியஸ் மற்றும் சிங்கப்பூர் வரி ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் மூலம் வரிச் சலுகைகளைக் குறைந்த நிலையில் தற்போது இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் கேமேன் தீவுகள் வாயிலாகவே இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள்.

கேமேன் தீவுகளில் மூலம் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்ய என்ன காரணம்..?

 கேமேன் தீவுகள்

கேமேன் தீவுகள்

கேமேன் தீவுகள் வாயிலாக நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவிற்கும் வரும் அன்னிய முதலீட்டின் அளவு 2.1 பில்லியன் டாலர். கேமேன் தீவுகளுக்கு முன் 8.3 பில்லியன் டாலர் முதலீட்டு உடன் சிங்கப்பூர் முதல் இடத்திலும், 7.12 பில்லியன் டாலர் மதிப்புடன் அமெரிக்கா 2வது இடத்திலும் உள்ளது.

மொரீஷியஸ் பின்னடைவு

மொரீஷியஸ் பின்னடைவு

2020 நிதியாண்டு வரையில் இந்தியாவில் அதிகளவில் அன்னிய முதலீடு செய்யப்பட்ட நாடுகளில் மொரீஷியஸ் 2வது இடத்தில் இருந்தது.இதே கேமேன் தீவுகள் 2019ஆம் நிதியாண்டில் 7வது இடத்திலும், 2020ஆம் நிதியாண்டில் 5வது இடத்தில் இருந்தது. தற்போது 2021ஆம் நிதியாண்டில் 3ஆம் இடத்தில் உள்ளது.

என்ன காரணம்..?

என்ன காரணம்..?

உலகில் பிற நாடுகளைப் போல் கேமேன் தீவுகளில் கார்பரேட் வரி இல்லை, இதனால் வெளிநாட்டு நாடுகளுக்கு முதலீடு செய்யவும், வருமான வரிப் பிடியில் இருந்து தப்பிக்கவும் ஏற்ற இடமாக உள்ளது. கார்பரேட் வரி இல்லாத காரணத்தால் இந்நாட்டு மக்களுக்கு எவ்விதமான நேரடி வரியும் இல்லை.

ஜீரோ வரி

ஜீரோ வரி

கார்பரேட் வரி, நேரடி வரி இல்லாத காரணத்தால் கேமேன் தீவுகளில் வருமான வரி, சொத்து வரி, கேப்பிட்ல் கெயின்ஸ் வரி, பேரோல் டாக்ஸ் போன்ற எந்த வரியும் இல்லை. இதனால் முதலீட்டாளர்களுக்குக் கேமேன் தீவுகள் ஒரு சொர்க்கமாகத் திகழ்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+