இந்திய மின்சாரத் துறையை மொத்தமாக அதிரவைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆர் இந்தியா நிறுவனத்தின் மூத்த பொது மேலாளரான உதய குமார், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது, நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களையும், ஊழியர்களையும் அதிர வைத்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் 2வது பெரும் பணக்காரரான கௌதம் அதானி மீதும் அவரின் நிறுவனத்தின் மீதும் அமெரிக்க SEC அமைப்பு பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து மிகப்பெரிய சோலார் மின்சார உற்பத்தி ஆர்டர் பெற்றதாகவும், இதை அமெரிக்க நிறுவனத்துடன் சேர்ந்து செய்யதது மட்டும் அல்லாமல் லஞ்சம் மூலம் பெற்றப்பட்ட திட்டத்தை அடிப்படையாக வைத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் முதலீட்டை திரட்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதை கௌதம் அதானி தரப்பில் முற்றிலும் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் மத்திய அரசன் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆர் இந்தியா நிறுவனத்தின் மூத்த பொது மேலாளரான உதய குமார், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டப்பட்டு சிபிஐ அவரை கைது செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த கே.இ.சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சாதகமான சலுகைகளை வழங்கியதற்காக, உதய குமார் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தானின் அஜ்மீரில் பணியாற்றி வந்த உதய குமார், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். லஞ்சத் தொகையை பரிமாற்றம் செய்வதற்காக உதய குமாரும், கே.இ.சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சுமன் சிங்கும் சிகாரில் (Sikar) சந்திக்க திட்டமிட்டிருந்தபோது, சிபிஐ அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர்.
சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அறிக்கையின் படி, ஐந்து தனிநபர்கள் மற்றும் கே.இ.சி இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். கே.இ.சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் வட இந்திய செயல்பாடுகளின் தலைவர் ஜப்ராஜ் சிங், சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் உள்ளார்.
இந்த லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்களின் பங்கு குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த கைது சம்பவம் குறித்து கே.இ.சி இன்டர்நேஷனல் நிறுவனம், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆர் இந்தியா நிறுவன இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த சம்பவம், பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications