டெல்லி: 25 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா தப்பிச்சென்ற பொருளாதார குற்றவாளியை சிபிஐ அதிகாரிகள் நாடு கடத்தி கைது செய்துள்ளனர். 25 ஆண்டுகளாக சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்த மோனிகா கபூரை சிபிஐ எப்படி கைது செய்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
யார் இந்த மோனிகா கபூர்?: 1990களில் டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு மோனிகா ஓவர்சீஸ் என்று நிறுவனத்தை நடத்தி வந்தவர் தான் மோனிகா கபூர். இவர் நகை ஏற்றுமதி இறக்குமதிக்காக போலியான ஆவணங்களையும் ரசீதுகள் மற்றும் வங்கி சான்றிதழ்களை தயாரித்துள்ளார். இதன் மூலம் வரியே இல்லாமல் தங்கத்தை இறக்குமதி செய்யும் உரிமத்தை இவர் பெற்றுள்ளார்.

என்ன மோசடி?: மோனிகா கபூரின் இந்த மோசடிக்கு அவருடைய சகோதரர்களான ராஜா கண்ணா மற்றும் ராஜீவ் கண்ணா ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர். தங்கம் மற்றும் பிற மூலப் பொருட்களை வெளிநாடுகளிடமிருந்து இவர்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்துள்ளனர். எந்தவித வரியும் செலுத்தாமல் 2.36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு மோனிகா கபூர் இறக்குமதி செய்திருக்கிறார் .
அரசுக்கு எவ்வளவு இழப்பு? : இதன் பின்னர் இந்த உரிமங்களை அகமதாபாத்தை சேர்ந்த டீப் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் அதிக விலைக்கு இவர் விற்பனை செய்திருக்கிறார். அந்த நிறுவனம் அரசு வழங்கிய உரிமத்தை பயன்படுத்தி வரியே இல்லாமல் கோடிக்கணக்கிலான மதிப்பு கொண்ட தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது. மோனிகா கபூர் செய்த இந்த மோசடியால் இந்திய அரசுக்கு 1.4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
அமெரிக்கா தப்பிய மோனிகா : இது தொடர்பாக வழக்குப்பதியப்பட்டது, இந்நிலையில் 1999ஆம் ஆண்டு மோனிகா கபூர் அமெரிக்காவுக்கு தப்பி சென்றார். அங்கே நியூயார்க்கில் அவர் தஞ்சமடைந்தார். இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணை 2002ஆம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி 2004 ஆம் ஆண்டு மோனிகா கபூர் மற்றும் அவருடைய சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
ரெட் கார்னர் நோட்டீஸ்: 2007ஆம் ஆண்டு மோனிகா கபூர் பொருளாதார குற்றவாளியாகவும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது . அவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்திருந்த நிலையில் அவரை அங்கிருந்து நாடு கடத்துவதற்கு சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தனர்.
25 ஆண்டுகளுக்கு பின் கைது: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தை நாடினர். 2010ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நடந்தது. 2012ஆம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றம் மோனிகா கபூரை நாடு கடத்த அனுமதித்தது. ஆனால் அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். அவரது முறையீடு ஏற்று கொள்ளப்படவில்லை நியூயார்க் நீதிமன்றம் மீண்டும் அவரை நாடு கடத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தான் தற்போது மோனிகா கபூர் அமெரிக்காவில் இருந்து டெல்லி வரவழைகப்பட்டு டெல்லி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications