கொல்கத்தா: நாட்டில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தொழில் துறைகளும் முடங்கியுள்ளன.
இந்த நிலையில் ஒவ்வொரு துறையும் தங்களுக்கு ஏற்றவாறு ஊழியர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு வட்டி இல்லாத கடன்களை 1 லட்சம் வரை நீட்டித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..!

அரசு அனுமதி
கொரோனாவினால் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், முற்றிலும் ஒவ்வொரு துறையும் முடங்கி வருகிறது. இதனையடுத்து கொரோனாவின் தாக்கத்தினால் ஏற்படும் செலவுகளை சமாளிக்கவும், மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை பாதுக்காத்துக் கொள்ளவும் கடந்த வாரத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ்3 மாத கால அவகாசம் வழங்கினார்.

வட்டியில்லா கடன்
இந்த நிலையில் தான் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தனது ஊழியர்களுக்கு வட்டியில்லா கடனை 1 லட்சம் ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடை பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் பணிக்கு வர இயலாத நிலையே நீடித்து வருகிறது.

சிறப்பு சலுகை
இதனால் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட கடன் வழங்குபவர் ஒரு மாத மொத்த சம்பளத்தை வட்டி இல்லாத கடனாக, 1 லட்சம் மிகாமலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அவர்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும், ஒரு நாள் சிறப்பு விடுப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இவர்களுக்கு சிறப்பு சலுகை
இது தவிர கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும், ஊனமுற்றோருக்கும் ஒர்க் பிரம் ஹோம் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் சிறப்பு விடுப்பில் உள்ள ஊழியர்கள் அல்லது தாமதமான கடன்களுக்கு இந்த சலுகை கிடைக்காது என்றும், இது தவிர சஸ்பென்சனில் உள்ளவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.