மும்பை: இந்திய எண்டர்டெயின்மென்ட் துறையில் ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இந்தியா நிறுவனங்களின் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள இணைப்பிற்கு, இரு நிறுவனங்களிடம் இருக்கும் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைகள் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஸ்ட்ரீமிங் உரிமையும், டிஸ்னி நிறுவனத்திடம் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் வைத்திருக்கும் வேளையில், இரு நிறுவனங்களின் இணைப்பின் மூலம் மொத்த கிரிக்கெட் உரிமையும் இந்த கூட்டணிக்கு வரும் காரணத்தால் போட்டித்தன்மை முற்றிலுமாக குறைந்து மோனோபோலி நிலையை உருவாக்க உள்ளது.

இதனால் இந்த இணைப்பு இந்திய எண்டர்டெயின்மென்ட் துறையில் போட்டித்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் என்று இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) தனது ஆரம்ப கட்ட மதிப்பீடுகளில் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய எண்டர்டெயின்மென்ட் துறையில் இதுவரை நடந்த இணைப்பு திட்டத்தில் இதுவே மிகப்பெரியதாக இருக்கும் வேளையில் இதில் ஏற்பட்டுள்ள பின்னடைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிஐ தனது கருத்தைத் தனிப்பட்ட முறையில் டிஸ்னி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது. மேலும், இந்த இணைப்பின் மீது ஏன் விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது என்பதற்கான காரணங்களை விளக்குமாறு கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இணைப்பில் இருக்கும் பிரச்சனையைக் களைய வேண்டும் என்பதற்காக ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இந்தியா கூட்டணி கடந்த வாரம் ஹிந்தி பொழுதுபோக்கு சேனல்கள், கன்னட, மராத்தி மற்றும் பங்காளி மொழி சேனல்களை மூட திட்டமிட்டு இருந்தது.
இதை தொடர்ந்து ஸ்ட்ரீமிங் பிரிவில் இக்கூட்டணியில் ஆதிக்கத்தைக் குறைக்க ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளங்களில், ஒன்றை மொத்தமாக மூட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதில் அதிகப்படியான வாய்ப்பு டிஸ்னி ஹாட்ஸ்டார் மூடப்படும் என கூறப்பட்டது. இதற்கு மத்தியில் தான் CCI அமைப்பின் எச்சரிக்கை வந்துள்ளது.
இந்த இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தில் ரிலையன்ஸ் 56% பங்கும், டிஸ்னி 37% பங்கும் வைத்திருக்கும். இந்த புதிய நிறுவனத்தில் 110க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா ஆகிய இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்கள் இடம்பெறும். ஜேம்ஸ் முர்டாக் மற்றும் உதய் சங்கர் ஆகியோர் துவக்கிய போதி டிரீ சிஸ்டம்ஸ் நிறுவனம், புதிய நிறுவனத்தில் 7% பங்கை வைத்திருக்கும்.
பிப்ரவரி மாதம் ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இந்தியா நிறுவனங்களின் இணைப்பு அறிவிக்கப்படும் போதே சிசிஐ இந்த இணைப்பை அதிரடியாக எதிர்க்கும் என கணித்திருந்தது.
இந்த இணைப்பு மூலம் இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனம் உருவாவது மட்டும் அல்லாமல் சோனி, ஜீ என்டர்டெயின்மென்ட், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் ஆகியவற்றுடன் 120 தொலைக்காட்சி சேனல்களும் மற்றும் இரண்டு ஸ்ட்ரீமிங் தளத்துடன் ஒரு நிறுவனம் போட்டிப்போடும் நிலை உருவாகும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications