இந்திய பொருளாதாரம் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டுகளிலேயே ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், நடப்பு காலாண்டில் ஆவது மீட்சியடையுமா? என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
ஆனால் தற்போது நிலவி வரும் நிலையை பார்த்தால் செப்டம்பர் காலாண்டில் கண்ட வளர்ச்சியையாவது காண்போமா? அது சாத்தியமா என்ற சந்தேகம் எழுகிறது.
ஒரு புறம் இந்தியாவை வாட்டி வதைக்கும் இந்திய பொருளாதார வீழ்ச்சி, மறுபுறம் தற்போது சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம், சர்வதேச பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தில் சிக்கல்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஏற்கனவே ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், தற்போது தான் கொஞ்சம் மீள ஆரம்பித்துள்ளது. அதற்கு முட்டுகட்டையாக இந்த கொரோனா வைரஸ் வந்துள்ளது. இந்தியாவின் முதன்மை பொருளாதார நிபுணரான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கொரோனாவின் பாதிப்பு, இந்திய பொருளாதாரத்தில் எதிரொலிக்கலாம். இது இந்திய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக வரலாம் என்றும் கூறியுள்ளார்.
பொருளாதாரம் மீள்வதற்காக வாய்ப்பு
இந்தியாவில் தற்போது பொருளாதாரம் மீள்வதற்கான சில பச்சை தளிர்கள் உள்ளன. ஆனால் நான் எச்சரிக்கையுடன் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் எதிரொலிக்கலாம்
மேலும் சீனாவின் கொரோனா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் மட்டும் அல்ல சர்வதேச பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. இது அரசாங்கம் மீண்டு வரும் நேரத்தில் வந்துள்ளது. ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 6- 6.5%ஆக விரிவடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதே இது இந்த ஆண்டு 5% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ணமூர்த்தி கடந்த மாதம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.
தாக்கம் எவ்வளவு இருக்கும் என்று கணிப்பது கடினம்
மேலும் இந்த கொரோனா வைரஸ் குறிப்பாக சீனாவில் சில நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது. மேலும் இதன் தாக்கத்தினை அளவிடுவதும் மிக கடினம். ஆக இதன் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்று கணிப்பிட முடியாது என்றும் கூறப்படுகிறது. ஆக இது எந்தளவுக்கு பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் என்றும் நிச்சயமாக கூற முடியாது எனவும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
வளர்ச்சிக்கான அறிகுறி
அண்மையில் இந்தியாவில் வெளிவந்த வாங்கும் திறன் குறித்த குறீயீடு வெளியானது. இது உற்பத்தி மற்றும் சேவைகள் நல்ல முறையில் மீண்டு வருவதை காட்டியது. மேலும் கடந்த வாரத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அதிக பணவீக்கத்தின் மத்தியில் வட்டி விகிதங்களை மாற்றாமல் விட்டுவிட்டது. அதே நேரத்தில் கடன் செலவினங்களைக் குறைக்க வழக்கத்திற்கு மாறான கொள்கைகளைக் பின்பற்றியது.
சுற்றுலா வருவாய் வீழ்ச்சி
ஏற்கனவே 1,000 மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட கொரோனாவின் பயத்தால் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த உலகளாவிய வர்த்தகத்திற்கான அபாயங்களை மத்திய வங்கி கோடிட்டது. கொரோனா வைரஸின் பரவலானது முதல் மூன்று மாதங்களில் உலகப் பொருளாதாரத்திற்கு 280 பில்லியன் டாலருக்கு அதிகமாக செலவாகும். எப்படி எனினும் கொரோனாவின் தாக்கம் எந்த அளவில் இருக்கும் என்று கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்றும் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் சார்ஸ் வைரஸ் பரவிய காலத்தில் இந்தியா அவ்வளவாக பாதிக்கப்படவில்லை, அதைத்தான் தற்போது நான் எதிர்பார்க்கிறேன் என்று சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications