ஜிடிபி 2021.. பொருளாதாரம் 2-ம் கட்ட கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்படவில்லை.. CEA கருத்து..!

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததினை போல. 20.1% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த காலாண்டில் மோசமான நிலைக்கும் மத்தியில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது.

இதே கடந்த ஆண்டில் வளர்ச்சி விகிதம் வரலாறு காணாத அளவு மோசமான வளர்ச்சியினை கண்டது.

இதற்கிடையில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலைக்கு மத்தியில் பொருளாதாரம், அவ்வளவாக பாதிக்கப்படவில்லை என தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறியுள்ளார்.

சிறப்பான வளர்ச்சியாக கருத முடியாது

சிறப்பான வளர்ச்சியாக கருத முடியாது

இதே மற்றொரு நிபுணர் நாட்டின் ஜிடிபி விகிதம் என்பது இரட்டை இலக்கில் வளர்ச்சி கண்டிருந்தாலும், குறைந்த அடித்தளத்தில் இருந்து வளர்ச்சி கண்டுள்ளது. ஆக இதனை சிறப்பானதாக கருத முடியாது. இது நாட்டின் வலுவான அடிப்படை காரணிகளை காட்டுகின்றது. ஆக இது வலுவான வளர்ச்சி என எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதல்

பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதல்

இந்திய பொருளாதாரம் கொரோனா தொற்று நோயின் தாக்கத்தில் இருந்து, நல்ல வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதனால் வளர்ச்சியில் ஒரு கூர்மையான அதிகரிப்பினைக் கண்டுள்ளது. இது அரசு செலவினங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள், பணவியல் கொள்கை ஆதரவுகள், கொரோனா தடுப்பூசி போடுதல் என பலவும் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

கொரோனாவால் பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்

கொரோனாவால் பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்

இதே சமூக வலைதளங்களில் இது குறித்து பல கருத்துகள் நிலவி வருகின்றது. தற்போது இரட்டை இலக்க வளர்ச்சி ஆரம்பமாகி விட்டது. இந்த ஆண்டு முழுவதும் இரட்டை இலக்கில் வளர்ச்சி காணுமா? கொரோனாவை கட்டுப்படுத்த பாடு பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என வாழ்த்தினையும் கூறி வருகின்றனர்.

வி வடிவ வளர்ச்சி

வி வடிவ வளர்ச்சி

கடந்த ஆண்டில் வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகர், பொருளாதாரம் வி வடிவ வளர்ச்சியினை காணலாம் என கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அதே போல மீண்டும் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+